பொதுவாக பாஜகவினர் காங்கிரஸ் முன்னால் தலைவர் ராகுல் காந்தியை பப்பு என்ற அடைமொழி பெயர் வைத்து விமர்சித்து வந்தனர். இந்த நிலையில் மக்களவையில் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா; பா.ஜ.க அரசு தான் `பப்பு’ என்ற வார்த்தையை உருவாக்கியது. திறமையின்மையைக் குறிக்க இந்த வார்த்தையை பயன்படுத்துகின்றனர். ஆனால் புள்ளிவிவரங்கள் உண்மையான பப்பு யார் என்பதைக் காட்டுகிறது.
நாட்டில் தொழில்துறை உற்பத்தி அக்டோபர் மாதத்தில், கடந்த 26 மாதங்களில் இல்லாத அளவுக்கு நான்கு சதவிகிதம் சரிந்துள்ளது. கடந்த 9 ஆண்டுகளில் சுமார் 12.5 லட்சம் பேர் இந்தியக் குடியுரிமையைத் துறந்திருக்கின்றனர். இப்போது யார் பப்பு..? என பா.ஜ.க-வை நோய் கேள்வி எழுப்பி இருந்தார் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா.
மஹுவா மொய்த்ராவின் யார் பப்பு..? என்ற கருத்துக்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்; மத்திய அரசைக் குறிவைத்து, இப்போது “பப்பு யார்” என்று கேட்டிருந்தார் மஹுவா மொய்த்ரா. தன் வீட்டின் கொல்லைப்புரத்தைப் பார்க்க வேண்டும். அப்போது பப்பு மேற்கு வங்கத்தில் இருப்பதைக் கண்டுபிடிப்பார்.
அனைத்து மேக்ரோ-பொருளாதார அடிப்படைகளும் கேள்விக்குள்ளாக்கப்படுவதாக மத்திய நிதியமைச்சர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். சாமானியர்களின் நலனுக்காக சிறந்த திட்டங்கள் வரும்போதெல்லாம், மேற்கு வங்கம் அவர்களைக் கேள்வி கேட்கிறது என்பதில் சந்தேகமில்லை. மேற்கு வங்காளத்தில் மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்களைச் செயல்படுத்துவதில்லை என்ற குற்றச்சாட்டை மக்களவையில் வைத்தார்.