fbpx

இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு முன்னுரிமை…! மத்திய அமைச்சர்

இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்திய தொழில்துறை மற்றும் உற்பத்தித் துறையை ஊக்குவிப்பதன் அவசியத்தை வலியுறுத்திய அமைச்சர், இதன் மூலம் வேலைவாய்ப்பு ஊக்குவிக்கப்படுவதுடன், மக்களின் வாழ்க்கையும் வளமாகும் என்று தெரிவித்தார். சுற்றுலாப் பயணிகள் தங்களது நிதி ஒதுக்கீட்டில் குறைந்தபட்சம் ஐந்து சதவீதத்தை உள்ளூர் தயாரிப்புகளுக்கு செலவிட வேண்டும் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் கோரிக்கையை முன்வைத்த அவர், திறமைமிக்க நமது கலைஞர்கள், கைவினைஞர்கள், தொழில்முனைவோர் உள்ளிட்டோருக்கு ஆதரவளித்து, அவர்களை ஊக்குவிக்க வேண்டும் என்று கூறினார்.

கடந்த 30 ஆண்டுகளில் இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி 11.8 மடங்கு அதிகரித்திருப்பதை திரு கோயல் சுட்டிக்காட்டினார். வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளுக்காக போராடுவதில் இருந்து மக்களுக்கு விடுதலை அளிப்பதை உறுதி செய்வதற்காக கட்டமைப்பு சார்ந்த சீர்திருத்தங்களில் அரசு தீவிர கவனம் செலுத்தியதன் காரணமாக மக்களின் நிலை தற்போது பன்மடங்கு மேம்பட்டிருப்பதாக கூறினார். இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

மத்திய அரசின் சூப்பர் திட்டம்..!! மாதம் ரூ.18,300 கிடைக்கும்..!! இதை மட்டும் செய்தால் போதும்..!!

Sun Oct 30 , 2022
பிரதான் மந்திரி வய வந்தனா யோஜனா திட்டத்தில் ரூ.15 லட்சத்தை முதலீடு செய்தால், ஒவ்வொரு மாதமும் ஓய்வூதியமாக ரூ.18,300 பெறலாம். உலகிலுள்ள அனைவருக்கும் பணம் என்பது எப்போதும் எந்த வயதிலும் தேவையான ஒன்று. சம்பாதிக்கும் காலத்திலேயே சிறிதளவு பணத்தை சேமித்து வைத்துக்கொண்டால் அது நமது ஓய்வுகாலத்திற்கு பின்னர் நமது எதிர்கால நிதி தேவைகளை சமாளிக்க உதவியாக இருக்கும்.  ஓய்வுகாலத்திற்கு பிறகு நீங்கள் பணத்தை பற்றி கவலையில்லாமல் வாழ 2017ஆம் ஆண்டு […]

You May Like