fbpx

தமிழகத்தின் தன்னிகரற்ற தலைவர்!… எளிமைக்கு சொந்தக்காரர்!… ஓயாத மக்கள் தொண்டு!… கக்கன் பிறந்தநாள் சிறப்பு!

தமிழகத்தின் தன்னிகரற்ற தலைவர், இன்றளவும் எளிமையான அரசியல்வாதிக்கு முன்னுதாரணமாகக் காட்டப்படுவோரில் ஒருவர் தமிழக முன்னாள் அமைச்சர் கக்கன். அவரின் 114ஆவது பிறந்தநாள் இன்று.

மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த தும்பைப்பட்டி கிராமத்தில் 1908 ஆம் ஆண்டு ஜூன் 18 ஆம் தேதி பிறந்தவர் கக்கன். எட்டாம் வகுப்பு வரையே படித்த இவர், பள்ளிக் கல்வியை மேலூர் தொடக்கப்பள்ளி, திருமங்கலம் பி.கே.என். நாடார் உயர்நிலைப் பள்ளி ஆகியவற்றில் படித்த அவர், எஸ்.எஸ்.எல்.சிக்குப் பிறகு படிப்பைத் தொடரவில்லை. இதற்குப் பிறகு மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞரும் சுதந்திரப் போராட்ட வீரரும் காங்கிரஸ் தலைவருமான அ. வைத்தியநாதரின் அறிமுகம் கக்கனுக்குக் கிடைத்தது.

வெள்ளையனே வெளியேறு, ஆகஸ்ட் புரட்சி போன்ற சுதந்திரப் போராட்டங்களில் ஈடுபட்டவர். கக்கன், 1942 முதல் 1944 வரை 18 மாதங்கள் சிறைவாசம் அனுபவித்தவர். 1941-42ல் பட்டியலின மாணவர்களுக்காக மேலூரில் கக்கன் துவங்கிய தங்கும் விடுதி, அவர் மறைவுக்குப் பிறகும் பல ஆண்டுகள் இயங்கிவந்தது. தமிழகத்தில் 1946ம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினராகவும், 1952ம் ஆண்டு மக்களவை உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட கக்கன், 1954 முதல் 1957 வரை தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவராக பொறுப்பு வகித்தார். காமராஜர் தலைமையில் அமைந்த காங்கிரஸ் ஆட்சியில் 1957 முதல் 1967 வரை 10 ஆண்டுகள் பொதுப் பணித்துறை, காவல்துறை, சிறைத்துறை, அறநிலையத்துறை உள்ளிட்ட 12 துறைகளுக்கு அமைச்சராக இருந்தவர் கக்கன். கக்கன் உள்துறை அமைச்சராக இருந்த காலகட்டத்தில் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதும் அதில் பலர் இறந்ததும் கக்கனின் பொது வாழ்வில் மிகப் பெரிய விமர்சனத்திற்குரிய நிகழ்வாக அமைந்ததது.

இவர் அமைச்சராக இருந்தபோதுதான் மேட்டூர் மற்றும் வைகை அணைகள் கட்டப்பட்டன. இவர் விவசாய அமைச்சராக இருந்தபோது தமிழகத்தில் இரண்டு வேளாண் பல்கலைக்கழகங்கள் திறக்கப்பட்டன. 1967 சட்டமன்றத் தேர்தலில் மேலூர் தொகுதியில் போட்டியிட்ட கக்கன் மிகக்குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார். 1973 இல் அரசியலிலிருந்து ஓய்வு பெற்ற அவர் இறுதிக் காலத்தில் ஏழ்மையால் நோய்வாய் பட்டு மதுரை அரசு மருத்துவமனையில் படுக்கை வசதியின்றி தரையில் படுத்து சிகிச்சை பெற்றார், அப்போது தமிழக முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர் நேரில் வந்து கக்கனைப் பார்த்து நலம் விசாரித்ததுடன், மருத்துவர்களிடம் அவருக்குச் சிறப்புச் சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார்.

1981 டிசம்பர் மாதம் 23 ஆம் தேதி சென்னையில் கக்கன் காலமானார். அவரது நினைவாக அவர் பிறந்த ஊரான மேலூர் அருகே தும்பைப்பட்டியில் 2001ல் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியால் தியாகி கக்கனுக்கு மணிமண்டபம் திறக்கப்பட்டது. இவர் நாட்டுக்கு ஆற்றிய பணிகளைப் பாராட்டி, இந்திய அரசு கக்கனின் உருவப்படம் பொறித்த சிறப்பு அஞ்சல் தலையை 1999ம் ஆண்டு வெளியிட்டுக் கௌரவப்படுத்தியது.

Kokila

Next Post

புனிதமான அன்பை கொடுக்கும் அனைத்து அப்பாக்களுக்கும் தந்தையர் தின வாழ்த்துகள்!... சிறப்பு தொகுப்பு!

Sun Jun 18 , 2023
தந்தை மகற்கு ஆற்றும் உதவி அவையத்து முந்தி இருப்பச் செயல்” எனும் வள்ளுவர் வாய்மொழி நின்று தனது உடல்,பொருள்,ஆவி அனைத்தும் நல்கி தான் பெற்ற மக்களின் நலம் பேண தினம் உழைக்கும் தந்தைமார்கள் அனைவருக்கும் இந்த இனிய தந்தையர் தின நாள் வாழ்த்துக்கள். உண்ணாமல், உறங்காமல், ஓய்வறியா உழைப்பினை நாளும் நல்கி தன் மக்களது வாழ்வின் இன்பமே எதிர்பார்த்து வாழ்ந்து கொண்டிருக்கும் போற்றுதலுக்குரியவர்கள் தந்தைகள். எந்தவொரு குழந்தையும் தங்கள் வாழ்க்கையில் […]

You May Like