fbpx

6 வயது சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற இளைஞன்.. ஒட ஒட விரட்டி அடித்த குரங்கு கூட்டம்..!! – என்ன நடந்தது?

6 வயது சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற நபரை குரங்குகள் கூட்டம் விரட்டிய அடித்த சம்பவம் உத்தர பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது. உத்தரபிரதேசத்தில் உள்ள பாக்பத் என்ற இடத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. போலீஸ் அதிகாரிகளின் கூற்றுப்படி, குற்றம் சாட்டப்பட்ட நபர் எல் கே ஜி படிக்கும் 6 வயது சிறுமியை வீட்டிற்கு இழுத்து, ஆடைகளை அவிழ்த்து, பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றனர், சிறுமியின் அலரல் சத்தம் கேட்டு, திடீரென்று குரங்குகள் கூட்டம் சம்பவ இடத்திற்கு வந்தன. குரங்குகளின் அட்டூழியத்திற்கு பயந்து அவர் சிறுமியை விட்டுவிட்டு அந்த நபர் தப்பி ஒடியுள்ளான்.

சம்பவம் குறித்து பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளதாக தெரிவித்த போலீசார், தப்பியோடிய குற்றவாளியை தேடும் பணி நடைபெற்று வருவதாக கூறினார். அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் குற்றவாளி, சிறுமியை தன்னுடன் அழைத்துச் செல்வது பதிவாகியுள்ளது. சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபர் அதே பகுதியை சேர்ந்தவர் என்பது சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கண்டறியப்பட்டது. சிறுமி தனது வீட்டிற்கு வெளியே விளையாடுவதைக் கண்டதும், தன்னுடன் வரும்படி அவர் சிறுமியை வற்புறுத்தினார்.

சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட சிறுமி கூறுகையில், அவர் தனது கையைப் பிடித்து, முதலில் தெருவுக்கு அழைத்துச் சென்றதாகவும், பின்னர் யாருமில்லாத வீட்டிற்கு அழைத்துச் சென்றதாகவும், அங்கு அவர் அவளை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாகவும் தெரிவித்தார். தன்னை எதிர்த்தால் தன்னையும் தனது குடும்ப உறுப்பினர்களையும் கொன்று விடுவதாக மிரட்டியதாக சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். தன்னைக் காப்பாற்றியதாகக் கூறப்படும் குரங்கு தாக்குதலுக்குப் பிறகு, சிறுமி வீட்டிற்கு ஓடிச்சென்று பெற்றோரிடம் நடந்த சம்பவம் குறித்து கூறியுள்ளார்.

Read more ; போக்குவரத்து ஊழியர்கள் கவனத்திற்கு.. வங்கி சார்பில் ஆயுள் காப்பீட்டு திட்டம்..!! உடனே இத பண்ணுங்க..

English Summary

UP: ‘Monkey Attack’ Foils Man’s Bid To Rape Six-Year-Old Girl In Baghpat, Accused On The Run

Next Post

”ஏட்டய்யா உங்க பேரையும் சேர்த்து எழுதுங்க”..!! வடிவேலு பற்றிய உண்மையை போட்டுடைத்த பிரபல நடிகை..!!

Mon Sep 23 , 2024
When you act with Vadivelu sir, you can't stop laughing. He is such a comedian. Priyanka has said that it was because of Vadivelu that she got her life.

You May Like