fbpx

பாதுகாப்பு சேவைகளுக்கான UPSC தேர்வு முடிவுகள் வெளியீடு…! 30 நாட்களுக்குள் ஆன்லைன் மூலம் பார்க்கலாம்

மத்திய பணியாளர் தேர்வாணையம் (UPSC) நடத்திய ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைகளுக்கான தேர்வு (I), 2024 மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்தின் சேவைகளுக்காக மத்திய தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட நேர்காணல்களின் முடிவுகள் அடிப்படையில் இறுதியாக தகுதி பெற்ற 590 (470 +120) விண்ணப்பதாரர்களின் பட்டியல் கீழ் வரும் பயிற்சிகளில் சேர்வதற்கு தகுதி அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளன.

தகுதி அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் பெயர் பட்டியலில் வெளியிடப்பட்டு மருத்துவப் பரிசோதனை முடிவுகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாத நிலையில், அனைத்து விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் தற்காலிகமானதாகும். இந்த விண்ணப்பதாரர்களின் பிறந்த தேதி மற்றும் கல்வித் தகுதியை இராணுவத் தலைமையகம் சரிபார்க்கும். விண்ணப்பதாரர்கள் மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளமான http://www.upsc.gov.in என்ற முகவரியில் முடிவுகள் குறித்த தகவல்களைப் பெறமுடியும். இருப்பினும், தேர்வர்களின் மதிப்பெண்கள் இறுதி முடிவுகள் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து 15 நாட்களுக்குள் தேர்வாணைய இணையதளத்தில் 30 நாட்களுக்கு கிடைக்கும்.

மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையத்தின் வளாகத்தில் தேர்வு மைய கட்டடத்திற்கு அருகில் உதவி மையத்தில் தேர்வு நடைபெறும் நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரையும், 011-23385271, 011-23381125 மற்றும் 011-23098543 ஆகிய தொலைபேசி எண்கள் மூலமாகவும் தேர்வு தொடர்பான விளக்கங்களை பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது‌.

English Summary

UPSC Defence Services Exam Results Released

Vignesh

Next Post

HBD Harris Jayaraj!. 'நெஞ்சைப் பூப்போல் கொய்தவளே'!. மெலோடி கிங்; ரிங்டோன் நாயகன் ஹாரிஸ் ஜெயராஜ் பிறந்தநாள் இன்று!.

Wed Jan 8 , 2025
HBD Harris Jayaraj!. 'Snowdrop on heat'!. 90's Kids Favorite!. Ringtone hero Harris Jayaraj's birthday today!.

You May Like