fbpx

அதிர்ச்சி.! வகுப்பறையில் மயங்கி விழுந்த மாணவன்.! ‘மாரடைப்பால்’ மரணம் மருத்துவர்கள்.!

இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை வயது வித்தியாசம் இன்றி மாரடைப்பு மரணங்கள் தொடர்ந்து வருகிறது. மத்திய பிரதேசம் மாநிலத்தில் அரசு பணி தேர்விற்கு தயாராகிக் கொண்டிருந்த மாணவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூர் நகரைச் சேர்ந்த ராஜா லோதி என்ற மாணவர் மத்திய அரசின் யுபிஎஸ்சி தேர்வு எழுதுவதற்காக பயிற்சி பள்ளி ஒன்றில் பயின்று வந்திருக்கிறார். இந்நிலையில் வகுப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது ராஜா திடீரென மயங்கி விழுந்துள்ளார்.

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சக மாணவர்கள் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றுள்ளனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மாரடைப்பால் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனைக்கு வந்த காவல்துறையினர் இறந்த இளைஞரின் உடலை பிரேத பரிசோதனை அனுப்பி வைத்தனர். வகுப்பறையில் மாணவர் மாரடைப்பால் மரணம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

Next Post

BREAKING NEWS | "கலைஞரின் நிழல்" உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர்.!

Thu Jan 18 , 2024
திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் அமைச்சருமான ஆற்காடு வீராசாமி உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆறு முறை திராவிட முன்னேற்றக் கலகம் சார்பாக சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் மூன்று முறை அமைச்சராகவும் பதவி வைத்திருக்கிறார். மறைந்த திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கலைஞருடன் நிழல் போல இருந்து அவரைப் பார்த்துக் கொண்டவர் ஆற்காடு வீராசாமி. இதன் காரணமாக கலைஞரின் நிழல் என செல்லமாக அழைக்கப்பட்டவர். திராவிட முன்னேற்றக் […]

You May Like