யுரேனியம் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பினை அந்நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. அந்த அறிவிப்பின்படி யூ.சி.ஐ.எல் நிறுவனத்தில் காலியாக உள்ள எலக்ட்ரிக்கல் ஃபோர் மேன் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. அந்த நிறுவனத்தில் எலக்ட்ரிக்கல் ஃபோர் மேன் பிரிவில் ஐந்து காலியிடங்கள் உள்ளன. அவற்றை நிரப்புவதற்காக தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அன்று நிறுவனம் அறிவித்துள்ளது.
அந்த அறிவிப்பின்படி இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் ஐந்து வருடங்கள் சம்பந்தப்பட்ட துறையில் அனுபவம் பெற்று இருக்க வேண்டும். இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிக்க உச்சபட்ச வயது வரம்பு 35 ஆகும். இந்த பணிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு ஊதியமாக மாதம் ரூ.46,020/- வரை வழங்கப்படும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வேலை வாய்ப்பிற்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். தகுதியும் விருப்பமும் உடைய நபர்கள் யூ.சி.ஐ.எல் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று 28.04.2023 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பதாரர்கள் நேர்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்க எந்தவித கட்டணமும் இல்லை. மேலும் இந்த வேலை வாய்ப்பினை பற்றிய பிறவி விவரங்களை அறிந்து கொள்ள ucil.gov.in என்ற இணையதள முகவரிக்கு சென்று தெரிந்து கொள்ளலாம்.