மின்சாரத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி சிறைக்கு சென்றதற்கு பின்னர் அந்தத் துறையானது அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது இந்த துறையில் அமைச்சர் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்த முயற்சி செய்து வருகிறார். அதன் அடிப்படையில் தற்பொழுது TANGEDCO நிறுவனத்தை மூன்றாக பிரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
நிதி பற்றாக்குறையால், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் (TANGEDCO) வாரியம், பிரபல கன்சல்டன்சி நிறுவனமான Ernst & Young நிறுவனத்தின் பரிந்துரையை ஏற்று, தனித்தனி உற்பத்தி மற்றும் விநியோக நிறுவனங்களாகப் பிரிக்கவும், மேலும் 3 புதிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனத்தை உருவாக்கவும் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பான இறுதி அழைப்பு மாநில அரசால் எடுக்கப்படும் என்று சொல்லப்படுகிறது.
தமிழக அரசு நடத்தும் மின்சாரப் வாரியம், அதன் நிதிநிலைகளை ஆராய்ந்து, மேம்பாடு மற்றும் சிறந்த சேவைகளை வழங்குவதற்கான ஆலோசனைகளைப் பரிந்துரைக்க, 2021 இல் ஆலோசகரை நியமித்தது. ஆலோசகரின் பரிந்துரையானது டாங்கெட்கோவின் தற்போதைய நிதி நிலைமையை அடிப்படையாகக் கொண்டது, அதன் நிலுவையில் உள்ள கடன்கள் மார்ச் 31 நிலவரப்படி ரூ.1.44 லட்சம் கோடியைத் தொட்டுள்ளது. மின்சார வாரியம் தனி நிறுவனங்களாக உருவாக்கப்பட்டால் செலுத்த வேண்டிய வட்டி வீதம் 9.5 சதவிகிதம் அல்லது அதற்கும் குறைவாக இருக்கும்” என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மரபுசாரா எரிசக்தி ஆதாரங்களை மேம்படுத்துவதில் முக்கியமாக கவனம் செலுத்தும் தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு ஆணையம், புதிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனத்தை உருவாக்கவும் பரிந்துரைத்துள்ளதாக தெரிவித்தன. 2030 ஆம் ஆண்டிற்குள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் அதன் மொத்த ஆற்றல் தேவையில் 50 சதவீதத்தை பூர்த்தி செய்ய அரசு இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. மேலும் 2030 ஆம் ஆண்டுக்குள் 20,000 மெகாவாட் சூரிய சக்தியை நிறுவவும், மேலும் 5,000 மெகாவாட் காற்றாலை மின்சாரத்தை பொது மற்றும் தனியார் கூட்டாண்மை அடிப்படையில் அமைக்கவும் திட்டமிட்டுள்ளது.
தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் (TNERC) 2017 இல், மின்சார வாரியத்தை தனி விநியோக மற்றும் உற்பத்தி நிறுவனங்களாக பிரிக்க பரிந்துரைத்தது. ஆனால் அப்போது இந்த மாற்றம் செய்யப்படவில்லை. தற்போது TANGEDCO-வை மூன்றாக பிரித்து அதன் மூலம் தனி நிறுவனங்கள் உருவாக்கப்பட்டு நன்மைகள் ஏற்படும் என அரசு தரப்பில் சொல்லப்பட்டாலும், தனி நிறுவனங்களை அமைப்பதை TANGEDCO வாரியத்தின் முடிவை தொழிற்சங்கங்கள் கடுமையாக எதிர்க்கின்றன.