fbpx

ஆரஞ்சு பழம் யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்த உதவுமா….?

உடலில் யூரிக் அமிலம் அதிகரிப்பதன் காரணமாக, கீல்வாதம் மற்றும் சிறுநீரக கற்களால் பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புண்டு, யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்தும் ஒரு சில வழிமுறைகளை பற்றி தற்போது நாம் தெரிந்து கொள்ளலாம். அதாவது, முடக்கு வாதம், மூட்டு திசு சேதங்கள் என்று பல்வேறு பிரச்சனைகளை மட்டுமல்லாது, இதய நோய்களையும் ஏற்படுத்தும் பியூரின்கள் அதிகமாக இருக்கின்ற ஒரு சில உணவுகளை சாப்பிடாமல் தவிர்ப்பதன் மூலமாக, இந்த யூரிக் அமில பிரச்சனை மட்டுமல்லாமல், வேறு சில நோய்களையும் நம்மால் கட்டுப்படுத்த முடியும்.

சில நோய்கள் உணவு முறை மற்றும் மரபியல் காரணிகள் போன்றவை அதிக அளவு யூரிக் அமிலத்தை சுரக்க வைக்கும் மது அருந்துவதை தவிர்ப்பது மற்றும் சில உணவுகள் மற்றும் பானங்களை கட்டுப்படுத்துவது அமிலம் சுரப்பதை குறைக்க உதவும். ரசாயனம் கலந்த, பதப்படுத்தப்பட்ட சில குளிர்பானங்களை குடிப்பதை விட, இளநீர் உள்ளிட்ட இயற்கையான பானங்கள் உடலில் அமிலங்கள் சுரப்பதை வெகுவாக கட்டுப்படுத்தும்.

விட்டமின் சி நிறைந்துள்ள ஆரஞ்சு பழம் சிறுநீரகக் கோளாறுகளை சரி செய்யவும், யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்துவதற்கும் உதவியாக உள்ளது. எலுமிச்சை ஜூஸ், பச்சை காய்கறிகளின் சாறு போன்ற இயற்கையான சாறுகளை குடிப்பதன் மூலமாக, இரத்தத்தில் யூரிக் அமிலத்தின் அளவு குறையும் என்று சொல்லப்படுகிறது.

வளர்ச்சிதை மாற்றத்தை பாதிக்கும் காரணிகளில் உடல் எடையும் ஒன்று. ஆகவே உடல் எடை பராமரிப்பு என்பதும் யூரிக் அமில சுரப்புக்கு காரணமாக இருக்கிறது. உடல் எடையை குறைக்க பல வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. அதில் பல வழிமுறைகள் கீல்வாதத்தை ஏற்படுத்தும் யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்தும் என்று சொல்லப்படுகிறது.

உணவு உடற்பயிற்சி மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் கீழ்வாதம் மற்றும் அதிக யூரிக் அமில அளவுகளால் உண்டாகும் நோய்களை சீராக வைக்கின்றன. அதேபோன்று யோகா, தியானம் என்று பல்வேறு வழிகளில் செய்யும் உடற்பயிற்சியும், மன ஒருங்கிணைப்பும் யூரிக் அமில கட்டுப்பாட்டில் முக்கிய பங்கு வகிப்பதாக தெரிகிறது.கீல்வாதத்தை உண்டாக்கும் பிரச்சனைகளுக்கு ஆரம்ப புள்ளியாக உள்ள பியூரின்கள் இருக்கின்ற உணவுகளை தவிர்ப்பது மிகவும் முக்கியமாகும்.

Next Post

முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் மனோகர் சிங் கில் காலமானார்...!

Mon Oct 16 , 2023
முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் மனோகர் சிங் கில் காலமானார் . அவருக்கு வயது 86, உடல்நலக்குறைவு காரணமாக தெற்கு டெல்லி மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை காலமானார். கில் மன்மோகன் சிங் அரசாங்கத்தில் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சராகவும் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சராகவும் பணியாற்றினார். அவரது இறுதி ஊர்வலம் இன்று நடைபெற உள்ளது. பஞ்சாப் கேடரின் முன்னாள் இந்திய நிர்வாக சேவை (IAS) அதிகாரி, கில் டிசம்பர் […]

You May Like