பிரதமர் நரேந்திர மோடி, பிரான்ஸ் நாட்டிற்கு 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்த சுற்றுப் பயணத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி அமெரிக்காவுக்குச் சென்றார். தலைநகர் வாசிங்டனில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனையடுத்து அமெரிக்காவின் தேசிய உளவுத்துறை இயக்குநரான துளசி கப்பார்டை பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது தீவிரவாத ஒழிப்பு, சைபர் பாதுகாப்பு குறித்து இருவரும் ஆலோசனை நடத்தியதாகக் கூறப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி அந்நாட்டுத் தொழிலதிபர் எலான் மஸ்க்கை சந்தித்துப் பேசினார். அதன் தொடர்ச்சியாக அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்பை சந்தித்துப் பேசினார். இந்திய பாதுகாப்பிற்கு அமெரிக்கா ஆதரவு அளித்துள்ள நிலையில், டிரம்ப் – மோடி சந்திப்பை சீனா விமர்சித்துள்ளது. இதுகுறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் குவோ ஜியாகுன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “அமெரிக்கா – இந்தியா இடையிலான உறவில், சீனாவை யாரும் பிரச்னையாக மாற்றக்கூடாது.
இரு நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பானது, மற்ற நாடுகளின் நலன்களுக்கு தீங்கு விளைவிக்கக்கூடாது. இரு நாடுகளுக்கு இடையிலான விவகாரத்தில் மூன்றாம் தரப்பினரை குறிவைக்கவோ அல்லது தீங்கு விளைவிக்கவோ கூடாது. பிராந்திய அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் வளர்ச்சிக்கு உகந்ததாக இருக்க வேண்டும்’ என்று கூறியுள்ளது
Read more : படுக்கையறை சுவர்கள் இந்த நிறத்தில் இருந்தால்.. தம்பதியினரிடையே சண்டைகள் இருக்காது..!!