மேலும் 487 இந்தியர்களை வெளியேற்ற உள்ளதாக அமெரிக்காவிடம் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களை வெளியேற்றும் நடவடிக்கை தீவிரமடைந்துள்ளது. இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, சில இந்தியர்களும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு வருகிறார்கள். பிப்ரவரி 5ஆம் தேதியான நேற்று, பஞ்சாப்பின் அமிர்தசரஸில் 104 இந்தியர்கள் அமெரிக்க ராணுவ விமானம் மூலம் இறக்கிவிடப்பட்டனர்.
அமெரிக்காவின் 47வது அதிபராகப் பதவியேற்ற டொனால்ட் டிரம்ப் ஜனவரி 20ஆம் தேதி புலம் பெயர்ந்து சட்டவிரோதமாகத் தங்கி இருப்பவர்கள் மற்றும் சட்டவிரோதமான வழிகள் மூலம் நாட்டுக்குள் நுழைய முற்படுபவர்களுக்கு எதிராக முன்னெப்போதும் இல்லாத அளவுக்குப் பெரும் நடவடிக்கைகளை மேற்கொண்டார். அதன் ஒரு பகுதியாக அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களை வெளியேற்றும் நடவடிக்கை தீவிரமடைந்துள்ளது. இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, சில இந்தியர்களும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு வருகிறார்கள்.
பிப்ரவரி 5ஆம் தேதி, பஞ்சாப்பின் அமிர்தசரஸில் 104 இந்தியர்கள் அமெரிக்க ராணுவ விமானம் மூலம் இறக்கிவிடப்பட்டனர். தற்பொழுது மேலும் 487 இந்தியர்களை வெளியேற்ற உள்ளதாக அமெரிக்காவிடம் இருந்து தகவல் வந்துள்ளது. நாடு கடத்தும் போது இந்தியர்களை கண்ணியமாக நடத்த வேண்டும் என நாங்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறோம் என வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார்.
இந்த வெளியேற்றத்திற்காக அமெரிக்கா தனது ராணுவ விமானமான சி -17ஐப் பயன்படுத்தியது பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. இந்த விமானம் முழுக்க முழுக்கப் போர்க்காலங்களில் ராணுவப் பயன்பாட்டிற்காகவே உருவாக்கப்பட்டது.