fbpx

அமெரிக்க அதிபர் தேர்தல்… ஜோ பைடன் விலகல்..! தமிழருக்கு கிடைத்த வாய்ப்பு ..!

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளராக தமிழகத்தை பூர்விகமாக கொண்ட கமலா ஹாரிஸ் அறிவிக்கப்பட்டுள்ளார்.

எதிர்வரும் அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து விலகுவதாக அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார். இந்த தேர்தலில் அவர் ஜனநாயக கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில், தற்போது தேர்தலில் இருந்து அவர் விலகுவதாக அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது சமூக வலைதள பதிவில்; அமெரிக்க அதிபராக நான் பணியாற்றுவது எனது வாழ்நாளில் எனக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம் ஆகும். மீண்டும் தேர்தலில் போட்டியிடுவது எனது நோக்கம். இருந்தாலும் நான் தேர்தலில் இருந்து விலகுகிறேன். எஞ்சி உள்ள எனது பதவிக்காலத்தை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்துவேன். இது ஜனநாயக கட்சி மற்றும் நாட்டின் நலன் சார்ந்து நான் எடுத்துள்ள முடிவு. இது குறித்து விரைவில் விரிவாக பேசுவேன் என தெரிவித்துள்ளார்.

இம்முறை ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸுக்கு தனது முழு ஆதரவை வழங்க விரும்புவதாக போட்டியில் இருந்து விலகிய அதிபர் பைடன் தெரிவித்தார். கமலா ஹாரிஸ் போட்டியிட்டால் வீழ்த்துவது எளிது என குடியரசுக் கட்சியின் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

English Summary

US presidential election… Joe Biden withdraws..! A chance for Tamils

Vignesh

Next Post

அதிர்ச்சி!. சிகிச்சைக்கு சென்ற இளம்பெண் திடீர் மரணம்!. தவறான ஊசி போடப்பட்டதால் விபரீதம்!

Mon Jul 22 , 2024
Shock! The young woman who went to treatment died suddenly! Tragedy due to the wrong injection!

You May Like