அமெரிக்காவில் இருந்து ராஜஸ்தான் வந்தவருக்கு ஒமிக்ரான் XBB.1.5 தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. அமெரிக்காவில் அதிக நபர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ள இந்த தொற்று இந்தியாவில் முதல் முறையாக உறுதியாகியுள்ளது.
ஜெய்ப்பூர் தலைமை மருத்துவ சுகாதார அதிகாரி டாக்டர் விஜய் ஃபவுஜ்தார் கூறுகையில், டிசம்பர் 19 அன்று அமெரிக்காவில் இருந்து திரும்பிய அந்த நபருக்கு டிசம்பர் 22 அன்று காய்ச்சல் இருந்தது, பின்னர் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. “நேற்று வந்த மரபணு வரிசைமுறை அறிக்கையில் XBB.1.5 என்ற புதிய மாறுபாட்டைக் கண்டறிந்துள்ளது” என்று கூறினார்.
இந்த மாறுபாடு சீனாவுடன் எங்கும் இணைக்கப்படவில்லை என்றார். நோயாளி ஆரோக்கியமாக உள்ளார் மற்றும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். உறவினர்கள் மற்றும் அவர் தொடர்பில் இருந்தவர்களின் மாதிரிகளை எடுக்க மருத்துவக் குழு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.