அன்றாட சமையலில் பொடி உப்பிற்கு பதிலாக கல் உப்பை பயன்படுத்தினால் அதிக ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். இதன் மருத்துவ பயன்கள் குறித்து பார்க்கலாம்.
சமையலில் கல் உப்பை சேர்க்கும் பழக்கம் தற்போது மிகவும் குறைந்துவிட்டது. தேவைக்கேற்ப பொடி உப்பையே அதிகளவில் பயன்படுத்தி வருகின்றோம். இருப்பினும், இது சாதாரண அல்லது பொடி உப்பைக் காட்டிலும் அதிக ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. கடல் அல்லது ஏரியில் இருந்து உப்பு நீர் ஆவியாகி சோடியம் குளோரைட்டின் இளஞ்சிவப்பு படிகங்களை விட்டு வெளியேறிய பிறகு கல் உப்பு உருவாகிறது. ஹிமாலயன் பின்க் உப்பு போன்ற வேறு சில துணை வகை கல் உப்புகள் உள்ளன. ஆயுர்வேதத்தில், கல் உப்பு மிகவும் மதிக்கப்படும் உணவுப்பொருளாகும்.
கல் உப்பில் இரும்பு, துத்தநாகம், நிக்கல், மாங்கனீஸ் மற்றும் உடலுக்கு நன்மை தரும் தாதுக்கள் உள்ளன. அதன்படி, கல் உப்பு பொதுவான இருமல், சளி, நல்ல கண்பார்வை, செரிமானத்திற்கும் உதவுகிறது. அதன் குறைந்த சோடியம் உள்ளடக்கம் காரணமாக, சாதாரண உப்பை விட, கல் உப்பு உடலில் சோடியத்தின் அளவைக் கட்டுப்படுத்த உதவும். அதிகப்படியான சோடியம் மற்றும் பற்றாக்குறை இரண்டும் உடலுக்கு தீங்கு விளைவிக்கும். குறிப்பிடத்தக்க எலக்ட்ரோலைட் உள்ளடக்கம் காரணமாக, இது தசைப்பிடிப்பு மற்றும் நமது உடலில் உள்ள நரம்புகளின் சரியான செயல்பாட்டிற்கு உதவக்கூடும்