தற்போது உள்ள காலகட்டத்தில், உடல் எடையை குறைப்பது என்பது சவாலான ஒன்றாக மாறிவிட்டது. இதற்கு முக்கிய காரணம் உணவு கட்டுப்பாடு இல்லாதது தான். ஆம், கண்ட நேரத்தில் கண்ட உணவுகளை சாப்பிடுவதால் உடல் எடை அதிகரித்து விடுகிறது. பின்னர் ஏறிய எடையை குறைக்க பல முயற்சிகளை செய்கிறோம். குறிப்பாக பலர் சில மாத்திரைகள் மற்றும் பொடிகளை எடுத்துக்கொள்கின்றனர்.
ஆனால் அது முற்றிலும் தவறு. உடல் எடை, ஆரோக்கியமான முறையில் தான் குறைய வேண்டும். இல்லையென்றால் பக்க விளைவுகள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது. ஆனால் இயற்கையான முறைகளை பின்பற்றினால், நீண்ட காலத்திற்கு உடல் எடைக் கட்டுப்பாடாக இருக்கும். அந்த வகையில், உடல் எடை குறைப்பது குறித்து இந்திய பாரம்பரிய மருத்துவ முறைகளான ஆயுர்வேதம், சித்தா, யுனானியில் ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டது.
நடத்தப்பட்ட ஆய்வுகளின் படி, வெறும் வயிற்றில் ஒரு சில இயற்கை உணவுகளை மென்று சாப்பிடுவதால் உடலில் கொழுப்பு கரைவது மட்டும் இல்லாமல், உடலின் மெட்டபாலிசம் அதிகரிக்கும் என்பது தெரியவந்துள்ளது. அந்த வகையில், காலை வெறும் வயிற்றில் எந்த பொருளை மென்று சாப்பிடுவது நல்லது என்பது குறித்து இந்த பதிவின் மூலம் தெரிந்துக்கொள்ளுங்கள்.. இது நீங்கள் உடல் எடையை குறைக்க பெரிதும் உதவும்.
இதில் முதல் இடத்தில இருப்பது வெந்தயம் தான். இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், இது உடலில் உள்ள கொழுப்பை கரைக்க உதவுவது மட்டும் இல்லாமல், மெட்டபாலிசத்தையும் அதிகரிக்க உதவும். இதன் விளைவாக உடலில் உள்ள கொழுப்பு வேகமாக எரியும். குறிப்பாக, உடல் எடையை குறைக்க நினைக்கும் நீரிழிவு நோயாளிகளுக்கு இது நல பலனை தரும். இதற்கு நீங்கள், 1 டீஸ்பூன் வெந்தயத்தை இரவில் ஊற வைத்து, காலையில் வெறும் வயிற்றில் மென்று சாப்பிடலாம்.துளசி இலை :
இயற்கை டிடாக்ஸ் செய்யும் பண்புகளை கொண்டது துளசி தான். இது உடலில் உள்ள கொழுப்பை குறைத்து, கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. இதனால், உடல் எடையை சீராகக் கட்டுப்படுத்த முடியும். இதற்கு, வெறும் வயிற்றில் 3-5 துளசி இலைகளை மென்று சாப்பிட வேண்டும். இதனால் குடல் சுத்தமாக இருப்பது மட்டும் இல்லாமல், உடல் சோர்வை நீக்கும். .
நல்ல கொழுப்பு மற்றும் புரதம் நிறைந்த உணவுகளில் ஒன்று பாதாம். இது உடலில் உள்ள கொழுப்பை ஆற்றலாக மாற்றுகிறது. இதனால் உடலில் உள்ள கொழுப்பு குறைகிறது. இதற்கு இரவில், 5-7 பாதாம்களை தண்ணீரில் ஊற வைத்து, காலையில் வெறும் வயிற்றில் தோலை நீக்கி மென்று சாப்பிடுங்கள். இதனால் பசி
உணர்வே இருக்காது.
Read more: கேன்சர் செல்களை அழிக்கும் அற்புத மருந்து; இந்த வேர் பற்றி கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்..