உலகளவில் அதிக பயனர்களை கொண்ட வாட்ஸ்அப் (WhatsApp) நிறுவனம் முன்னணி மெசேஜிங் ஆப்-ஆக உள்ளது.. இந்தியாவில் கோடிக்கணக்கான பயனர்களை வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர்.. வாட்ஸ் அப் நிறுவனம் தனது பயனர்களின் வசதிக்காக பல்வேறு புதிய வசதிகளையும், அப்டேட்களையும் வழங்கி வருகிறது.. அந்த வகையில் விரைவில் ஒரு புதிய அம்சத்தை வாட்ஸ் அப் அறிமுகம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது..
அதன்படி, வாட்ஸ்அப் பயனர்கள், இனி வாட்ஸ்அப் குழுக்களுக்கான (Whatsapp Groups) காலாவதி தேதியை அமைக்க முடியும் என்று கூறப்படுகிறது.. புதிய விருப்பம் குழு தகவலுக்குள் (group info) கிடைக்கும் என்று வாட்ஸ் அப்-ஐ கண்காணிக்கும் தளமான WABetaInfo தெரிவித்துள்ளது. இந்த அம்சம் வெளியிடப்படும் போது, பயனர்கள் ஒரு நாள், ஒரு வாரம் அல்லது தேதியை தாங்களாகவே அமைப்பது போன்ற பல்வேறு காலாவதி விருப்பங்களிலிருந்து தேர்வு செய்ய முடியும். மேலும், பயனர்கள் தங்கள் எண்ணத்தை மாற்றினால், முன்பு அமைக்கப்பட்ட காலாவதி தேதியை மாற்றவோ அல்லது அகற்றவோ முடியும்.
இருப்பினும், இந்த தனிப்பட்டதாக இருக்கும் மற்றும் பிற குழு பங்கேற்பாளர்களுக்குப் பயன்படுத்தப்படாது. குழுக்களுக்கான காலாவதி தேதியைத் தேர்ந்தெடுக்கும் அம்சம் தற்போது உருவாக்கத்தில் உள்ளது.. மேலும் இந்த புதிய அம்சம் வாட்ஸ் அப் செயலியின் எதிர்கால அப்டேட்டில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..