fbpx

Vastu Tips : சமையலறையில் பாத்திரத்தை இப்படி வைக்க கூடாது..!! வாஸ்து என்ன சொல்கிறது?

நம் வீட்டில் பொருட்களை எப்படி அமைப்பது என்பது குறித்து வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. வீடு சுத்தமாக இருந்தால் நேர்மறை ஆற்றல் இருக்கும் என்ற வாஸ்து விதியும் உள்ளது. ஒவ்வொருவரும் வாழ்க்கையில் வளர்ச்சியை அடைய வேண்டுமென்று விரும்புகின்றனர். அதற்கு கட்டாயம் வாஸ்து குறிப்புகளை பின்பற்ற வேண்டும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. வீட்டில் ஹாலில் இருந்து பாத்ரூம் வரை அனைத்திற்கும் வாஸ்து குறிப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது.

குறிப்பாக, சமையலறையில் உள்ள பாத்திரங்களை எப்படி வைப்பது போன்றவைக்கான வாஸ்து குறிப்புகளையும் பிரபல ஜோதிடர் பிரதுமன் சூரி கூறியுள்ளார். அதாவது, பல நேரங்களில் பெண்கள் தோசை, ரொட்டி செய்த பின் கழுவிய தவாவை தலைகீழாக கவிழ்த்து வைப்பார்கள். ஆனால், வாஸ்து படி அப்படி செய்யக்கூடாதாம். இது நிதி இழப்பை வலுப்படுத்தும் என சொல்லப்படுகிறது. அதேபோல், வாஸ்து படி பானை, குக்கரை கழுவி கவிழ்த்து வைப்பது தவறாகும். இது வீட்டில் எதிர்மறை ஆற்றலை அதிகரிக்குமாம். வாஸ்து படி எண்ணெய் கடாயை கவிழ்க்கக் கூடாதாம். இதனால், அன்னப்பூரணி கோபப்படுவதாக வாஸ்து சாஸ்திரம் சொல்கிறது.

சமைத்த பிறகு அடுப்பில் பாத்திரத்தை வைக்க வேண்டாம். இதை செய்வது அசுபமாக கருதப்படுகிறது. சூடான பாத்திரத்தை நேரடியாக தண்ணீரில் போடக்கூடாது. அதிலிருந்து வெளிப்படும் சத்தம் உங்கள் வாழ்க்கையில் சிரமங்களையும் இடையூறுகளையும் உண்டாக்கும்.

வீட்டில் உள்ள எந்த பாத்திரத்தையும் தலைகீழாக வைப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அவ்வாறு செய்வது வீட்டில் வாஸ்து குறைபாடுகளை ஏற்படுத்தும். இதனால் வீட்டில் உள்ளவர்களின் முன்னேற்றத்தில் தடைகள் ஏற்படலாம். குடும்ப உறுப்பினர்களிடையே சண்டை சச்சரவுகள் வரலாம். அதேபோல், பாத்திரத்தில் உணவு ஏதேனும் ஒட்டி இருந்தால், அதை கூர்மையான பொருளால் அகற்ற வேண்டாம். அதை தண்ணீரில் ஊற வைத்து சுத்தம் செய்வது நல்லது.

Read more ; டிசம்பரில் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 5 ராசிகள் இவை தான்.. பணம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படுமாம்.

English Summary

Utensil should not be placed like this in kitchen..!! What does Vastu mean?

Next Post

தொப்பையை சுலபமாக குறைக்க வேண்டுமா?? அப்போ தொடர்ந்து இந்த காய் சாப்பிடுங்க..

Thu Nov 28 , 2024
eat-this-vegetable-to-loss-fat

You May Like