உத்தரகண்ட் மாநிலத்தின் கேதார்நாத்தில் அமைந்துள்ள மந்தாகினி ஆற்றங்கரையில் கார்வால் சிவாலிக் மலை தொடரில் பிரசித்தி பெற்ற கேதார்நாத் கோவில் அமைந்து இருக்கிறது.
வருடம் தோறும் இந்த கோவிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வார்கள். கருச்சட்டி பகுதிக்கு சுமார் ஐந்து கிலோ மீட்டர் வரை மலை ஏறி நடந்து செல்ல வேண்டும்.
எனவே, இங்கே வயதான பக்தர்கள் உடல்நிலை சரியில்லாதவர்கள் யாரும் சென்று தரிசனம் செய்ய முடியாது. அத்துடன் பிற பக்தர்களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகுவார்கள். எனவே இதை கருத்தில் கொண்டு மத்திய அரசு தற்போது அப்பகுதியில் ரோப் கார் சேவை துவங்க திட்டமிட்டு இருக்கிறது.
இதற்கு தேசிய வனவாழ்வு வாரியம் அனுமதியும் வழங்கி உள்ளது. எட்டு மணி நேரம் நடக்கின்ற இந்த பயணமாது ரோப் கார் வசதியின் மூலமாக வெறும் 25 நிமிடங்களாக குறைந்துவிடும் என்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தும் விஷயம்.