உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனை சேர்ந்தவர் ஜிம் பயிற்சியாளர் இவருக்கு ஒரு மகன், ஒரு மகன் என 2 குழந்தைகள் இருக்கின்றன. இந்த நிலையில் தான் ஜிம் பயிற்சியாளரின் மனைவி ஹரியானா மாநிலம் பரிதாபத்தைச் சேர்ந்த ஒருவருடன் சமூக வலைதளங்களின் மூலமாக பழகி வந்துள்ளார். நாளடைவில் இவர்களுடைய பழக்கம் காதலாக மாறியதாக தெரிகிறது.
இந்த நிலையில் தான் கள்ளக்காதலன் மீது இருந்த அதீத மோகம் காரணமாக, அந்த பெண் கடந்த ஆண்டு தன்னுடைய கள்ளக்காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறினார்.
ஆகவே ஜிம் பயிற்சியாளர் மாநில உயர்நீதிமன்றத்தை அணுகியுள்ளார். மேலும் அங்கே தன்னுடைய மனைவி வேறொருவருடன் தனியாக வாழ்ந்து வருவதாகவும் தன்னுடைய மனைவி சட்டதிறந்த காவலில் வைக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்து ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார் நீதிபதிகள் அந்த பெண்ணை கடந்த மே மாத 4ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துமாறு காவல்துறை கண்காணிப்பாளருக்கு உத்தரவு பிறப்பித்தனர்.
அதன்படி ஜிம் பயிற்சியாளரின் மனைவி தன்னுடைய கணவர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதால் இனி அவருடன் வாழ விருப்பமில்லை என்று தெரிவித்துள்ளார். இதனை அடுத்து நீதிபதிகள் பங்கஜ் புரோஹித், மனோஜ் திவாரி ஆகியோர் அடங்கிய அமர்வு இருதரப்பு கருத்துகளையும் கேட்டறிந்து ஜிம் பயிற்சியாளரின் மனைவிக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியிருக்கிறது.
தன்னுடைய விருப்பத்தின் பெயரில்தான் அந்தப் பெண் வேறொரு நபருடன் சேர்ந்து வாழ்கிறார் என கூறி இருக்கிறது.
ஆனால் ஜிம் பயிற்சியாளரின் வழக்கறிஞர் இந்த தீர்ப்புக்கு கடுமையான ஆட்சேபத்தை தெரிவித்திருக்கிறார். இது போன்ற தீர்ப்புகள் திருமண சட்டத்திற்கு ஆபத்தாக மாறிவிடும் எனவும் இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்வோம் என்றும் அவர் கூறியிருக்கிறார்.