உத்திரபிரதேசத்தில் சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக கூறி இரண்டு வருடமாக பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டு வந்த நபர் போலீசார் கைது செய்யப்பட்டுள்ளார்.
உத்தர பிரதேச மாநிலத்தில் இருக்கும் சுல்தான்பூர் பகுதியில் வாலிபர் ஒருவர் முதுகலை பட்டப்படிப்பு படித்து வந்துள்ளார். இவர் ஒரு சிறுமியிடம் நட்பு ரீதியாக பழகிய நிலையில் அவரிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகளை கூறியுள்ளார்.
இதனால், அந்த பெண்ணும் இளைஞரை நம்பி அவர் இழுத்த இழுப்புக்கெல்லாம் சென்றுள்ளார். இரண்டு வருடங்களாக சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்து வந்த நிலையில் அவர் உடல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளார். ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாத சிறுமி காவல் நிலையத்திற்கு சென்று புகார் கொடுத்துள்ளார்.
அந்த புகாரில் மனைவி என்று அழைத்து என்னை மனைவியைப் போல நடந்துக்கச் சொல்லி பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்ததாக கூறியுள்ளார். இதனை தொடர்ந்து, அந்த இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.