fbpx

“அம்மா, நீ ஒரு பொண்ண கல்யாணம் பண்ணிக்கோ”; வனிதாவின் மகள்கள் கொடுத்த அட்வைஸ்..

பொதுவாக வனிதா என்றாலே நமது நினைவிற்கு வருவது அடாவடிதான். இவர் தனது நடிப்பின் மூலம் பிரபலம் ஆனதை விட, தனது பேச்சால் பிரபலம் ஆனவர் என்றே சொல்லலாம். இவரது திருமண வாழ்க்கை, இவர் நினைத்த அளவிற்கு சிறப்பாக இல்லை என்றே சொல்லலாம். பலர் இவர் இன்னும் எத்தனை திருமணத்தை தான் செய்வார் என்று விமர்சித்தனர். இவருக்கு சினிமா வாய்புகள் சரியாக கிடைக்காத நிலையில், இவர் விஜய் டிவியின் குக் வித் கோமாளி, பிக்பாஸ் நிகழ்ச்சிகள் மூலமும் இவரது ரசிகர்கள் வட்டத்தை அதிகரித்த்துக் கொண்டார். இதன் மூலம், இவருக்கு தற்போது பட வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன.

இவர் தனது சொந்த குடும்பத்தை விட்டு தனியாக வாழ்ந்து வரும் நிலையில், தன்னுடைய அம்மா, அப்பா மற்றும் உடன் பிறந்தவர்கள் குறித்து அவ்வப்போது தனது வருத்தத்தையும் ஆதங்கத்தையும் பகிர்ந்து வருகிறார். இவர் தற்போது சென்னையில் தனது இரு மகள்களுடன் தனியாக வசித்து வருகிறார். இவர் 3 திருமணங்கள் செய்த நிலையில், இவரது மகள்கள் இவரிடம் கேட்ட கேள்வி ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வனிதா, பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்த போது, அவரது மூத்த மகளின் நடவடிக்கையை பலரும் விமர்சித்தனர். அதில் அவர், கட்டாயத்தின் பேரில் அதில் கலந்து கொண்டது போல் சோகமாக இருப்பார்.

இந்நிலையில், அவரது மகள்கள் வனிதாவிடம், “ஆண்களும் ஆண்களும் திருமணம் செய்கிறது போல, பெண்களும் பெண்களும் திருமணம் செய்கிறார்கள். அப்படி திருமணம் செய்பவர்கள் சந்தோசமாகத்தான் இருக்கிறார்கள். அதனால் நீ ஏன் ஒரு பெண்ணை திருமணம் செய்யக் கூடாது என்று தனது மகள்கள் தன்னை திட்டுவதாக வனிதா விஜயகுமார் தற்போது வெளிப்படுத்தியுள்ளார்.

Read more: ரேஷன் அரிசி சாப்பிட்டால் இந்த நோய்கள் வராது… இனி வேஸ்ட் பண்ணாதீங்க..

English Summary

vanitha-vijayakumars-daughter-scolded-her-mother

Next Post

இளம்பெண் வைத்த வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்; தூக்கிட்டு தற்கொலை செய்த காதலன்..

Sun Dec 8 , 2024
man-committed-suicide-after-seeing-his-lovers-status

You May Like