fbpx

வரலட்சுமியின் வாழ்க்கைக்கு ஆபத்து..!! கணவர் இவ்வளவு மோசமானவரா..? அதிர்ச்சி கொடுத்த பிரபலம்..!!

நடிகை வரலட்சுமி கடந்த 2ஆம் தேதி நிக்கோலாய் சச்தேவ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களது திருமணம் படு பிரமாண்டமாக நடைபெற்றது. இதையடுத்து, சென்னையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் பிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில், வரலட்சுமியின் கணவர் குறித்து மருத்துவரும், திரை ஆர்வலருமான காந்தராஜ் பேசியிருக்கும் விஷயங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சரத்குமாரின் மகள் வரலட்சுமி மும்பையை சேர்ந்த தொழிலதிபர் நிக்கோலாய் சச்தேவை காதலித்தார். மும்பையில் நிக்கோலாய் ஆர்ட் கேலரி ஒன்றை வைத்து வருகிறார். கோடீஸ்வரரான அவருக்கு மும்பையில் நல்ல செல்வாக்கு இருக்கிறது. தொழிலதிபர்கள், பாலிவுட் நடிகர்கள், நடிகைகள் என அனைவருடனுமே பழக்கம் இருக்கிறது. நிக்கோலாய் ஏற்கனவே ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்டவர். சில காரணங்களால் அவரிடமிருந்து விவாகரத்து பெற்றுவிட்டார். அந்த தம்பதிக்கு 16 வயதில் ஒரு மகளும் இருக்கிறார்.

இந்நிலையில் தான், வரலட்சுமியின் காதல் குறித்து சரத்குமாருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் தெரியவந்ததை அடுத்து க்ரீன் சிக்னல் கொடுத்தனர். இதையடுத்து, சில மாதங்களுக்கு நிச்சயதார்த்த விழா சிறப்பாக நடந்து முடிந்தது. தொடர்ந்து ஜூலை 2ஆம் தேதி இருவரது திருமணம் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, நேற்று முன்தினம் தாய்லாந்தில் இவர்களது திருமணம் நடந்து முடிந்தது. இதனைத் தொடர்ந்து, திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது..

இந்நிலையில் வரலட்சுமி – நிக்கோலாய் திருமணம் குறித்து மருத்துவரும், திரை ஆர்வலருமான காந்தராஜ் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அதில், ”நிக்கோலாய் ஆபத்தனவராகக்கூட இருக்கலாம். முதல் மனைவிக்கு துரோகம் செய்து டார்ச்சர் கொடுத்திருக்கலாம். அதோடு பல பெண்களுடன் தொடர்பிலும் இருக்கலாம். இந்தத் திருமணத்துக்கு சரத்குமாரின் முதல் மனைவி சாயாதேவி வரவில்லை. ஒருவேளை சாயாதேவியை சரியான வகையில் வரலட்சுமி நடத்தாமல் இருந்திருக்கலாம்.

நிக்கோலாயை வரலட்சுமி தனது 39ஆவது வயதில் திருமணம் செய்துகொண்டிருக்கிறார். இது ஒரு லேட் மேரேஜ் என்பதை ஏற்றுக்கொள்ளலாம். இதன் காரணமாக குழந்தை பெற்றுக்கொள்வதில் சிக்கல் ஏற்படும். இந்தியாவில் இவர்களது திருமணம் நடந்திருந்தால் சட்ட சிக்கல் ஏற்படலாம் என்பதை அறிந்து தாய்லாந்தில் திருமணத்தை நடத்தியிருக்கலாம். திருமண வயதில் நிக்கோலாய்க்கு ஏற்கனவே ஒரு மகள் இருக்கிறார். சூழல் இப்படி இருக்க இப்போது இன்னொரு பெண்ணை நிக்கோலாய் திருமணம் செய்துகொள்வது தவறாக கருதப்படும் அல்லவா? இந்தத் திருமணம் ஒரு சமூக பாதுகாப்புக்காகத்தான் நடந்திருக்கிறது. இதில் எந்தக் காதலும் இல்லை. ஏனென்றால் அவர் ஏற்கனவே திருமணம் ஆனவர். பல பெண்களோடு அவருக்கு தொடர்பும் இருந்திருக்கலாம்” என்றார்.

Read More : மாணவர்களே..!! நாளையே கடைசி..!! விண்ணப்பிக்க சூப்பர் வாய்ப்பு..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!

English Summary

Nikolai could even be dangerous. He might have cheated on his first wife and tortured her. And may be in contact with many women.

Chella

Next Post

ஆச்சரியம்!. வானில் இருந்து விழும் மின்னல் எத்தனை ஆயிரம் வோல்ட் தெரியுமா?

Thu Jul 4 , 2024
Do you know how many thousands of volts is lightning from the sky?

You May Like