fbpx

ரன்மழை பொழிந்த வெங்கடேஷ்-ரிங்கு சிங் ஜோடி!. ஐதராபாத்தை 80 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா அபார வெற்றி!.

KKR VS SRH: ஐபிஎல் தொடரின் நேற்றைய லீக் ஆட்டத்தில் வெங்கடேஷ் ஐயர் – ரிங்கு சிங் ஆகியோரின் அதிரடியால் 80 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத்தை வீழ்த்தி கொல்கத்தா அணி அபார வெற்றிபெற்றது.

கொல்கத்தா, ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடந்த பிரிமியர் லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா அணி, ஐதராபாத்தை எதிர்கொண்டது. ஐதராபாத் கேப்டன் கம்மின்ஸ், ‘டாஸ்’ வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார்.
கொல்கத்தா அணிக்கு சுனில் நரைன் (7), குயின்டன் டி காக்(1) ஜோடி மோசமான துவக்கம் கொடுக்க, 16/2 ரன் என திணறியது. பின் கேப்டன் ரஹானே, ரகுவன்ஷி இணைந்தனர். கம்மின்ஸ், ஷமி பந்துகளை சிக்சருக்கு விரட்டிய ரஹானே, சிமர்ஜீத் சிங் பந்திலும் சிக்சர் அடித்து மிரட்டினார். இவருக்கு சூப்பர் ‘கம்பெனி’ கொடுத்தார் ரகுவன்ஷி. ஷமி பந்தில் பவுண்டரி, சிமர்ஜீத் பந்தில், சிக்சர் என விளாசினார். இந்த ஜோடி 51 பந்தில் 81 ரன் எடுத்த போது, ரஹானே (38), அவுட்டானார்.

ரகுவன்ஷி 43 ரன் எடுத்த போது, ஜீஷான் பந்தில் கொடுத்த கேட்ச்சை, நிதிஷ் குமார் நழுவவிட்டார். வாய்ப்பை பயன்படுத்திய இவர், 30 பந்தில் அரைசதம் எட்டினார். பிரிமியர் தொடரில் இவரது இரண்டாவது அரைசதம் இது. அதே வேகத்தில் ரகுவன்ஷி (50), கமிந்து மெண்டிஸ் பந்தில், ஹர்ஷல் படேலின் ‘சூப்பர்’ கேட்ச்சில் அவுட்டானார். வெங்கடேஷ், ரிங்கு சிங் இணைந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். கம்மின்ஸ் வீசிய 19 வது ஓவரில் வெங்கடேஷ். 3 பவுண்டரி, 1 சிக்சர் அடிக்க, மொத்தம் 21 ரன் எடுக்கப்பட்டன. வெங்கடேஷ் 25 பந்தில் அரைசதம் எட்டினார். இவர் 29 பந்தில் 60 ரன் (ஸ்டிரைக் ரேட் 206.89) எடுத்து ஹர்ஷல் பந்தில் அவுட்டானார். கடைசி பந்தில் ரசல் (1) ரன் அவுட்டாக, கொல்கத்தா அணி 20 ஓவரில் 200/6 ரன் குவித்தது. ரிங்கு சிங் (32) அவுட்டாகாமல் இருந்தார்.

201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கைத் துரத்திய ஐதராபாத் அணிக்கு துவக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. வைபவ் அரோரா வீசிய முதல் பந்தில் பவுண்டரி அடித்த அபாயகரமான ஹெட் (4), 2வது பந்தில் அவுட்டானார். அபிஷேக் சர்மாவை (2), ஹர்ஷித் வெளியேற்றினார். மீண்டும் வந்த வைபவ், இஷான் கிஷானை (2) வீழ்த்த, ஐதரபாத் அணி 9/3 ரன் என தள்ளாடியது. நிதிஷ் குமாரும் (19) நிலைக்கவில்லை. நரைன் பந்தில் கமிந்து மெண்டிஸ் (27) அவுட்டானார். கிளாசன் 33, கம்மின்ஸ் 14 ரன் எடுத்தனர். ஐதராபாத் அணி 16.4 ஓவரில் 120 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி தோல்வியடைந்தது.

‘டி-20’ அரங்கில் ஒரு அணிக்காக 200 விக்கெட் சாய்த்த இரண்டாவது பவுலர் ஆனார் சுனில் நரைன். கொல்கத்தா அணிக்காக இவர் இம்மைல்கல்லை எட்டினார். முதலிடத்தில் சமித் படேல் (208, நாட்டிங்காம்ஷயர்) உள்ளார். கிறிஸ் உட் (199, ஹாம்சயர்), மலிங்கா (195, மும்பை), டேவிட் பெய்ன் (193, கிளவ்செஸ்டர்ஷயர்) அடுத்து உள்ளனர்.

Readmore: வெறும் 3மணி நேரத்தில் இந்தியா டூ துபாய்!. மணிக்கு 1000 கி.மீ. வேகம்!. இந்தியாவின் முதல் நீருக்கடியில் ரயில் இயக்கம்!.

English Summary

Venkatesh-Ringu Singh duo rained down runs! Kolkata beat Hyderabad by 80 runs in a huge win!

Kokila

Next Post

நாடு முழுவதும் 60 லட்சம் வேலைவாய்ப்புகள்!. ரூ.4,500 கோடியில் ஓட்டுனர் பயிற்சி நிறுவனங்கள்!. நிதின் கட்கரி அறிவிப்பு!

Fri Apr 4 , 2025
Driver training institutes across the country worth Rs. 4,500 crore!. 60 lakh jobs!. Nitin Gadkari's announcement!

You May Like