fbpx

பத்திரப்பதிவு செய்வோருக்கு செம குட் நியூஸ்..!! இன்று சுபமுகூர்த்த தினம்..!! கூடுதல் டோக்கன் விநியோகம்..!!

இன்று டிசம்பர் 5ஆம் தேதி வெள்ளிக்கிழமை கார்த்திகை மாத கடைசி வளர்ப்பிறை சுபமுகூர்த்த தினம் என்பதால், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் கூடுதலாக அதிகளவில் பத்திரங்கள் பதிவு செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், இன்று பத்திரப்பதிவுக்கு கூடுதல் டோக்கன் ஒதுக்கீடு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், “சுபமுகூர்த்த தினங்கள் என கருதப்படும் நாட்களில் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும், இதனால், அன்றைய தினங்களில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆவணப்பதிவுக்காக கூடுதல் முன்பதிவு டோக்கன் ஒதுக்கீடு செய்வது வழக்கம். அந்த வகையில், கார்த்திகை மாதத்தின் சுபமுகூர்த்த தினமான இன்று அதிகளவில் பத்திரப் பதிவுகள் நிகழும். இதனல், கூடுதலாக முன்பதிவு டோக்கன் ஒதுக்கீடு செய்யுமாறு பொதுமக்களிடம் இருந்து கோரிக்கைகள் எழுந்தன.

இதனை ஏற்று கார்த்திகை மாதத்தின் சுபமுகூர்த்த தினமான இன்று சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 முன்பதிவு டோக்கன்களும், 2 சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 300 முன்பதிவு டோக்கன்களும், அதிக அளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 150 சாதாரண முன்பதிவு டோக்கன்களுடன் ஏற்கனவே வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு டோக்கன்களுக்கு கூடுதலாக 4 தட்கல் முன்பதிவு டோக்கன்களும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Read More : ”புஷ்பா 2” சிறப்பு காட்சி..!! திரையரங்கில் போலீசார் தடியடி..!! கூட்ட நெரிசலில் சிக்கி பெண் பலி..!!

Chella

Next Post

உடல்முழுவதும் முடிகளுடன் பிறந்த குழந்தைகள்!. ஸ்பெயினில் அரியவகை நோய்!. பெற்றோர்கள் செய்த தவறே காரணம்!.

Thu Dec 5 , 2024
“Werewolf Syndrome”: ஸ்பெயினில் வேர்வொல்ஃப் சிண்ட்ரோம் என்ற அரியவகை நோய் பாதிப்பால் 11 குழந்தைகள் முகம், கால், முதுகில் முடிகளுடன் பிறந்துள்ளன. இதற்கு பெற்றோர்கள் முடி வளர்ச்சிக்கு பயன்படுத்திய மருந்தே காரணம் என்று தெரியவந்துள்ளது. மினாக்ஸிடில் ஆரம்பத்தில் ரத்த அழுத்தத்திற்கான வாய்வழி மருந்தாக உருவாக்கப்பட்டது, இது ரத்த விநியோகத்தை அதிகரிப்பதன் மூலமும் ஹேர் ஃபாலிக்கிள்ஸை தூண்டுவதன் மூலமும் முடி வளர்ச்சி, தடிமன் மற்றும் வலிமையை மேம்படுத்துவதை நிரூபித்தது. “மினாக்சிடில் முடி […]

You May Like