தமிழ்நாட்டில் கோடை வெயில் காரணமாக 1 – 5ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முன்கூட்டியே கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 1 முதல் 5 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஏப்ரல் 9ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை இறுதித் தேர்வு நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டின் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்திருக்கும் நிலையில், மாணவர்களுக்கு முன்கூட்டியே தேர்வு நடத்த வேண்டுமென்று பெற்றோர்கள் தரப்பில் இருந்து அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதுகுறித்து பேசியிருந்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து முன்கூட்டியே தேர்வு நடத்த முடிவு எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார். இந்நிலையில் தொடக்கக் கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏப்ரல் 7ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை ஒன்றாம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தேர்வுகள் நடைபெறும் என்று அறிவித்துள்ளது.
அதன்படி, ஏப்ரல் 7-ஆம் தேதி தமிழ் மொழிப் பாடத்திற்கான தேர்வு நடைபெறவுள்ளது. ஏப்ரல் 8ஆம் தேதி விருப்ப மொழிப் பாடம், ஏப்ரல் 9ஆம் தேதி ஆங்கிலம், ஏப்.11-ஆம் தேதி கணக்கு பாடங்களுக்கான தேர்வு நடைபெறவுள்ளது. இதனைத் தொடர்ந்து 4 மற்றும் 5 வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 15-ஆம் தேதி அறிவியல் மற்றும் 16-ஆம் தேதி சமூக அறிவியல் பாடத்திற்கான தேர்வு நடைபெறவுள்ளது.
Read More : மீண்டும் கனமழை அலர்ட்..!! கோடை வெயிலுக்கு மத்தியில் குளு குளு அறிவிப்பு..!! வானிலை ஆய்வு மையம் தகவல்..!!