fbpx

இன்று 5 மாவட்டங்களில் மிக அதிக கனமழை பெய்யும்.. வரும் 4-ம் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்..

தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் மிக அதிக கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ” தமிழகத்தின்‌ மேல்‌ நிலவும்‌ வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில், ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. தர்மபுரி, சேலம், நாமக்கல் திருச்சி, பெரம்பலூர்‌, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில்‌ கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல்‌, ஈரோடு, கரூர், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர்‌, அரியலூர்‌, கடலூர்‌, கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி மற்றும்‌ திருப்பத்தூர்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.
விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கன முதல்‌ மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தேனி, நீலகிரி, ஈரோடு, சேலம்‌ மற்றும்‌ தர்மபுரி மாவட்டங்களில்‌ ஒரிரு இடங்களில்‌ கன முதல்‌ மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. விருதுநகர்‌, மதுரை, திண்டுக்கல்‌, திருப்பூர்‌, கோவை, கரூர்‌, வ்நாமக்கல்‌, திருச்சி, பெரம்பலூர்‌, அரியலூர்‌, தஞ்சாவூர்‌, புதுக்கோட்டை, திருவாரூர்‌, கடலூர்‌, கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர்‌, வேலூர்‌ மற்றும்‌ ராணிப்பேட்டை மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது

வரும் 2-ம் தேதி, தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, நீலகிரி, சேலம்‌, தர்மபுரி, திருப்பத்தூர்‌, கள்ளக்குறிச்சி, கடலூர்‌, பெரம்பலூர்‌ மற்றும்‌ திருச்சி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கன முதல்‌ மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. விருதுநகர்‌, தேனி, திண்டுக்கல்‌, கோவை, திருப்பூர்‌, ஈரோடு, கரூர்‌, நாமக்கல்‌, கிருஷ்ணகிரி, வேலூர்‌, அரியலூர்‌, தஞ்சாவூர்‌, திருவாரூர்‌, புதுக்கோட்டை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம்‌ மாவட்டங்கள்‌ மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

வரும் 3-ம் தேதி, தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.
கோவை, திருப்பூர்‌, தேனி, திண்டுக்கல்‌ மற்றும்‌ தென்காசி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கன முதல்‌ மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர்‌, மதுரை, கரூர்‌, நாமக்கல்‌, நீலகிரி, ஈரோடு, சேலம்‌, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர்‌, வேலூர்‌, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மற்றும்‌ கள்ளக்குறிச்சி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

வரும் 4-ம் தேதி, தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகி, கோவை, திருப்பூர்‌, தேனி, திண்டுக்கல்‌ மற்றும்‌ தென்காசி மாவட்டங்களில்‌
ஓரிரு இடங்களில்‌ கன முதல்‌ மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. கன்னியாகுமரி, நெல்லை, விருதுநகர்‌, மதுரை, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர்‌, வேலூர்‌, ராணிப்பேட்டை, திருவள்ளூர்‌ மற்றும்‌ காஞ்சிபுரம்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒரு சில பகுதிகளில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசான/மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ்‌ அளவில்‌ இருக்கக்கூடும்‌. மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை..

லட்சத்தீவு பகுதிகள், கேரள – கர்நாடக கடலோர பகுதிகள்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய தென்கிழக்கு மற்றும்‌ மத்திய கிழக்கு அரபிக்கடல்‌ பகுதிகள், குமரிக்கடல்‌ பகுதிகள், மன்னார்‌ வளைகுடா , தென்‌ தமிழக கடலோர பகுதிகள்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்‌ கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கி.மீ வேகத்தில்‌ வீசக்கூடும்‌. எனவே இன்று முதல் வரும் 4-ம் தேதி வரை மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்‌..” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

Maha

Next Post

மனைவியை நண்பருடன் நேரில் பார்த்த கணவர்!., இருவரையும் கட்டி வைத்து தோலுரித்த அதிர்ச்சி சம்பவம்..!

Sun Jul 31 , 2022
ராஜஸ்தானின் பன்ஸ்வாரா மாவட்டத்தில் கணவரின் நண்பருடன் தொடர்பு வைத்திருந்த பெண் ஒருவரை 7 மணிநேரம் மரத்தில் கட்டி வைத்த அவரது கணவர் மற்றும் அவரது உறவினர்கள், மரத்தில் கட்டி வைத்தது மட்டும் அல்லாமல் அவரை அடித்து, துன்புறுத்தி உள்ளனர். இதில், அந்த பெண் சத்தம் போட்டு அலறியுள்ளார். இந்த வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. ஏனெனில், கணவரின் நண்பருடன் அந்த பெண் இருந்துள்ளார். இதனை நேரடியாக பார்த்ததில் […]

You May Like