fbpx

இடி, மின்னலுடன் கூடிய மிக அதிக கனமழை பெய்யுமாம்.. இந்த மாவட்ட மக்கள் கவனமா இருங்க…

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

சென்னை வானிலை மையம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ உள்‌ தமிழக பகுதிகளின்‌ மேல்‌ நிலவும்‌ வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.. நீலகிரி, கன்னியாகுமரி மற்றும்‌ நெல்லை மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கன முதல்‌ மிககனமழை பெய்யக்கூடும்‌. கோவை, திருப்பூர்‌, ஈரோடு, சேலம்‌, நாமக்கல்‌, தேனி, திண்டுக்கல்‌, தென்காசி, விருதுநகர்‌ மற்றும்‌ மதுரை மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை, தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, கோவை, திருப்பூர்‌, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர்‌, சேலம்‌, நாமக்கல்‌, கள்ளக்குறிச்சி, திண்டுக்கல்‌, தேனி, தென்காசி, மதுரை, கன்னியாகுமரி மற்றும்‌ நெல்லை மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

வரும் 1-ம் தேதி தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. தென்‌ தமிழக மாவட்டங்கள்‌, டெல்டா மாவட்டங்கள்‌, புதுக்கோட்டை, நீலகிரி, கோவை, திருப்பூர்‌, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, திண்டுக்கல், தேனி, தென்காசி, மதுரை, கன்னியாகுமரி, நெல்லை, திருச்சி, பெரம்பலூர்‌, கரூர், மாவட்டங்கள்‌ மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

வரும் 2-ம் தேதி, தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, கோவை, திருப்பூர்‌, ஈரோடு, சேலம்‌, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர்‌, நாமக்கல்‌ மற்றும்‌ திண்டுக்கல்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

வரும் 3-ம் தேதி, தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம்‌, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ ஒரளவு மேக மூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒருசில பகுதிகளில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது/ மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ்‌ அளவில்‌ இருக்கக்கூடும்‌.

குமரிக்கடல்‌ பகுதிகள்‌, மன்னார் வளைகுடா, தென்‌ தமிழக கடலோரப்‌ பகுதிகள்‌ மற்றும்‌ இலங்கையை ஒட்டிய தென்‌ மேற்கு வங்கக்கடல்‌ பகுதிகள், கேரள கடலோர பகுதிகள், லட்சத்தீவு, மாலத்தீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு வங்கக்கடல், தென்கிழக்கு அரப்பிக்கடல் பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கி.மீ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.. எனவே இன்று முதல் வரும் 3-ம் தேதி வரை மீனவர்கள்‌ இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்‌..” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

Maha

Next Post

அதிக தற்கொலை... தமிழகம் 2ஆம் இடம்..! என்ன காரணத்திற்காக தெரியுமா? ஷாக் ரிப்போர்ட்..!

Tue Aug 30 , 2022
2021ஆம் ஆண்டில் இந்திய அளவில் நடந்த தற்கொலைகளில் அதிக தற்கொலை பதிவான மாநிலங்களில் தமிழ்நாடு 2-வது இடத்தில் உள்ளது. 2021ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் 18,295 தற்கொலைகள் பதிவாகியிருப்பதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்ட அறிக்கையில் தெரியவந்துள்ளது. தமிழகத்திற்கு முன் முதலிடத்தில் மகாராஷ்ட்ரா உள்ளது. அங்கு 22,207 தற்கொலைகள் பதிவாகியுள்ளது. இந்திய அளவில் பதிவான தற்கொலைகளில் 11.5% தற்கொலைகள் தமிழகத்தில் தான் இருந்துள்ளது தெரியவந்துள்ளது. தமிழ்நாட்டில் பதிவான தற்கொலைகளில் 8,073 […]

You May Like