தங்கம் பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாகும். தென்னிந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் வகிக்கிறது. மேலும், தமிழ்நாட்டு பெண்களின் தங்க நகைகள் மீதான மோகம் மிகவும் அதிகம் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. இந்நிலையில், தங்கம் விலை கடந்த இரண்டு நாட்களாக விலை உயர்ந்து வந்த நிலையில் இன்று குறைந்துள்ளது.
அந்த வகையில் நேற்று தங்கம் விலை சவரனுக்கு 400 ரூபாய் உயர்ந்து 55 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று தங்கம் விலை சவரனுக்கு 320 ரூபாய் குறைந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 320 ரூபாய் குறைந்து 54 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
தங்கம் விலை கிராமுக்கு 40 ரூபாய் குறைந்து 6 ஆயிரத்து 860 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 2 ரூபாய் குறைந்து 99 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல் வெள்ளியின் விலை கிலோவுக்கு 1,100 குறைந்து 99 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது.
Read More: கணக்கு விவர அறிக்கை இணையதளத்தில் பதிவேற்றம்….! பொது வருங்கால வைப்பு நிதி முக்கிய அறிவிப்பு…!