fbpx

தமிழ்நாட்டில் துணைவேந்தர் நியமன பிரச்சனை.. மத்திய அரசு தீர்வுகாண உச்ச நீதிமன்றம் உத்தரவு..!!

துணைவேந்தர்களை நியமிக்க தமிழக அரசு தேடுதல் குழுவை அமைத்தது. இந்நிலையில் யு.ஜி.சி தலைவரையும் சேர்த்து தேடுதல் குழு அமைக்க வேண்டும் என்று தமிழக ஆளுநர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 6ம் தேதி தமிழ்நாடு அரசுக்கு அறிவுறுத்தினார். தமிழக அரசு கடந்த டிச.9ம் தேதி மற்றும் டிச.13ம் தேதி யு.ஜி.சி தலைவரை விடுத்து பிற மூன்று உறுப்பினர்களை கொண்டு தேடுதல் குழுவை அமைத்து அரசாணையை வெளியிட்டது. ஆனால் அந்த அரசாணைகளை திரும்பப் பெற வேண்டும், யு.ஜி.சி தலைவரை இணைத்து துணைவேந்தர் தேடுதல் குழு அரசாணையை வெளியிட வேண்டும் என பல்கலைக்கழக வேந்தரும் தமிழ்நாடு ஆளுநருமான ஆர்.என்.ரவி தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.

பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்தில் ஆளுநர் குறுக்கீடுக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அந்த மனுவில், “ஆளுநரின் உத்தரவு, பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமன செயன்முறையில் அரசியல் சாசன விதிகள்படி நடைமுறை உரிமை மீது தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அரசியல் சாசன விதிகளுக்கு முரணாகவும் உள்ளது. எனவே தமிழ்நாட்டில் ஆளுநர் அதிகாரம் விவகாரத்தில் மேற்கூறிய விவகாரங்களையும் உச்சநீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டும். அதற்காக தற்போது தாக்கல் செய்துள்ள கூடுதல் விவர மனுவையும் ஏற்று உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும்” என தமிழக அரசு கூறியுள்ளது.

தமிழ்நாட்டில் ஆளுநர் அதிகாரம் விவகாரத்தில் மேற்கூறிய விவகாரங்களையும் உச்சநீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதி பர்திவாலா தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழ்நாட்டில் துணைவேந்தர் நியமன பிரச்சனைக்கு ஒன்றிய அரசு தீர்வுகாண உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. துணைவேந்தர் நியமன வழக்கு அடுத்த விசாரணைக்கு வரும் முன்பு பிரச்சனைக்கு தீர்வுகாண வேண்டும் என்று ஆணையிடப்பட்டுள்ளது. பிரச்சனைக்கு ஒன்றிய அரசு தீர்வுகாணாவிட்டால் உச்ச நீதிமன்றம் தலையிடும் என்று நீதிபதிகள் எச்சரித்துள்ளனர்.

Read more ; ”உங்கள் கருத்தை ஏற்க முடியாது”..!! பிரபல யூடியூபர் சவுக்கு சங்கருக்கு ஜாமீன்..!! சென்னை ஐகோர்ட் உத்தரவு..!! எந்த வழக்கில் தெரியுமா..?

English Summary

Vice chancellor appointment problem.. Supreme Court order for Central Govt to resolve

Next Post

காபி குடிப்பதால் இறப்பு ஆபத்து குறையும்... ஆனா இந்த நேரத்தில் தான் குடிக்கணும்.. புதிய ஆய்வில் தகவல்...

Fri Jan 17 , 2025
A recent study has shown that drinking coffee can reduce the risk of death.

You May Like