fbpx

Video | பிரதமர் பாதுகாப்பு ஒத்திகையின் போது குறுக்கே வந்த சிறுவன்.. தலைமுடியை இழுத்து கண்ணத்தில் அறைந்த காவலர்..!!

பிரதமர் நரேந்திர மோடியின் வாகன ஒத்திகை நடந்து கொண்டிருந்த சாலையில், சைக்கிளில் சென்ற 17 வயது சிறுவனை சூரத் காவலர் ஒருவர் கடுமையாக தாக்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

சூரத் நகரில் ரத்தன் சவுக் பகுதியில் பிரதமர் மோடியின் வாகன பேரணி ஒத்திகை நடத்தப்பட்டது. பிரதமரின் வருகையை முன்னிட்டு எந்த விதமான பாதுகாப்பு குறைபாடும் இல்லை என்பதை உறுதி செய்வதற்காக, இந்த ஒத்திகை நடத்தப்பட்டது. அப்போது, 17 வயது சிறுவன் சைக்கிளில் அந்த பகுதியில் சென்றுள்ளான்.

இதைக் கண்ட காவல்துறையின் உதவி ஆய்வாளர் பி.எஸ். கத்வி, சிறுவனை நிறுத்தி, அவன் தலைமுடியை பிடித்து இழுத்து, ஆவேசமாக கன்னத்தில் அறைந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

சிறுவன் வீட்டுக்கு திரும்பியபோது அழுது கொண்டிருந்ததாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். “அவனை போலீசார் அடித்துவிட்டனர். ஆனால், ஏன் அடித்தார்கள் என்பது அவருக்கே புரியவில்லை,” என அவரது உறவினர் ஒருவர் கூறினார். காவலர்கள் ஆலோசனை வழங்கியிருக்கலாம் என்பதும் அவருடைய கருத்தாக இருந்தது. சிறுவன் தவறான விதத்தில் நடந்துகொண்டிருந்தால், அவனுக்கு காவலர்கள் ஆலோசனை வழங்கியிருக்கலாம். கடுமையான நடவடிக்கையை எடுத்தது தேவையில்லாத ஒன்று, என சமூக ஆர்வலர்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

Read more:’என்னால வெயிட் பண்ண முடியாது’..!! பைக்கை தோளில் தூக்கிக் கொண்டு ரயில்வே கேட்டை கடக்கும் நபர்..!! ரியல் பாகுபலியின் வீடியோ வைரல்..!!

English Summary

Video Of Surat Cop Slapping 17-Year-Old Boy For Cycling During PM Convoy Rehearsal Goes Viral

Next Post

இந்தியாவில் இஸ்ரேலிய சுற்றுலா பயணி உட்பட இரண்டு பெண்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை..!! பகீர் சம்பவம்

Sat Mar 8 , 2025
Two women, including Israeli tourist, gangraped in Karnataka, male friends attacked, probe underway

You May Like