fbpx

“ஒரு அப்பாவி கூட்டம் உங்களுக்கு ரசிகர்களாக உள்ளது”; தனுஷ் பற்றிய உண்மையை வெளியிட்ட விக்னேஷ் சிவன்..

முதன்முதலில் நானும் ரெளடி தான் படத்தில் நடிக்க கதை கேட்கும் போது விக்கியை சந்தித்த நயன்தாராவுக்கு முதல் சந்திப்பிலேயே அவர்மீது கிரஷ் வந்துவிட்டது. பின்னர் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருவருக்கும் இடையே நெருக்கம் அதிகமாகி நாளடைவில் அது காதலாகவும் மாறியது. இருப்பினும் வெளியே சொல்லாமல் இருவரும் சைலண்டாக காதலித்து வந்தனர். பின்னர் அரசல் புரசலாக செய்திகள் லீக் ஆனதும் விருது விழா ஒன்று விக்னேஷ் சிவன் உடன் ஜோடியாக வந்து, தங்கள் காதலை உறுதி செய்தார் நயன்தாரா. இதையடுத்து சுமார் 7 ஆண்டுகள் காதலித்து வந்த இந்த ஜோடி கடந்த 2022 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

நயன்தாரா விக்னேஷ் சிவனின் திருமண டாக்குமென்ட்ரி இரண்டு ஆண்டுகள் ஆகியும் வெளியாகாமல் தாமதித்து வந்தது. இந்நிலையில், டாக்குமென்ட்ரி வீடியோவில் நானும் ரவுடி தான் படக் காட்சிகளை பயன்படுத்த அந்த படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் அனுமதி மறுத்துள்ளார். இதையடுத்து, தனுஷுக்கு எதிராக நடிகை நயன்தாரா மற்றும் அவரது கணவர் விக்னேஷ் சிவன் அடுத்தடுத்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து பரபரப்பான அறிக்கையை வெளியிட்டுள்ளனர். அதில், கிட்டத்தட்ட 2 ஆண்டுகளாக தனுஷிடம் இதற்கான அனுமதி கேட்டு போராடுவதாகவும், அவரின் பழிவாங்கும் நடவடிக்கையால் அவரும் அவரது கணவரும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் நயன்தாரா கூறியுள்ளார்.

மேலும் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டா பக்கத்தில், ‘வாழு, வாழ விடு என நடிகர் தனுஷ் தன் ரசிகர்களுக்கு அட்வைஸ் செய்யும் பழைய வீடியோ ஒன்றை பகிர்ந்து, அதில் தன் வழக்கறிஞர்கள் மூலம் நயன்தாராவுக்கு தனுஷ் அனுப்பிய நோட்டீஸையும் இணைத்துள்ளார். அந்த நோட்டீஸில் நானும் ரவுடிதான் படக் காட்சிகளை பயன்படுத்த கூடாது என்றும், ஏற்கனவே டீசரில் 3 நொடிகள் பயன்படுத்திய மேக்கிங் வீடியோவுக்கு 10 கோடி சன்மானம் கேட்டும் தனுஷ் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இதனை சுட்டிக்காட்டிய விக்னேஷ் சிவன், நீங்கள் சொல்வதை எல்லாம் உண்மை என நம்பி ஒரு அப்பாவி கூட்டம் உங்களுக்கு ரசிகர்களாக உள்ளது. அவர்களுக்காகவாவது உண்மையாக இருங்கள். மனிதர்கள் மாற வேண்டி நான் இறைவனை பிரார்த்திக்கிறேன். அடுத்தவர்களின் மகிழ்ச்சியை பார்த்து மனிதர்கள் மகிழ்ச்சி அடைய வேண்டுகிறேன். வாழு வாழ விடு!” என தெரிவித்துள்ளார். மேலும், நயன்தாரா- விக்னேஷ் சிவன் பதிவுக்கு, நடிகர் தனுஷ் தரப்பு விளக்கம் அளிக்க மறுப்பு தெரிவித்துள்ளனர்.

Read more: 4 வயது சிறுமிக்கு, சலூன் கடைக்காரா் செய்த காரியம்.. அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர்..

English Summary

vignesh-shivan-opens-up-about-actor-dhanush

Next Post

'அமரன்' படத்தை திரையிட்ட திரையரங்கு; பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்கள்..

Sat Nov 16 , 2024
gasoline-bomb-was-blasted-on-the-theatre-that-released-amaran-movie

You May Like