விஜய் அரசியலுக்கு வந்து எந்தப் பிரயோஜனமும் இல்லை என ரஜினியின் சகோதரர் சத்திய நாராயண ராவ் விமர்சித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகம் கட்சியை துவங்கியுள்ள நடிகர் விஜய், அண்மையில் தனது கட்சியின் மாநாட்டை விக்கிரவாண்டியில் நடத்தி முடித்தார். அவரின் அரசியல் வருகை அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், விஜய் அரசியலுக்கு வந்து எந்தப் பிரயோஜனமும் இல்லை என ரஜினியின் சகோதரர் சத்திய நாராயண ராவ் கடுமையாக விமர்சித்துள்ளார்.
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்ய வந்த அவர், செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். அப்போது, விஜய்யின் அரசியல் வருகை குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், “வரட்டும், கமலை போன்று விஜய் முயற்சி செய்து பார்க்கட்டும்” என்று கூறினார். மேலும் ”அரசியலுக்கு வர எல்லோருக்கும் உரிமை உள்ளது. விஜய் தற்போது அரசியலுக்கு வந்து எந்த பிரயோஜனமும் இல்லை என்று தெரிவித்தார்.
எனினும் விஜயால் சாதிக்க முடியாது என்றும், முயற்சி செய்து பார்க்கட்டும் என்றும் சத்திய நாராயண ராவ் கூறினார். அரசியல் ஆசை விஜய்க்கு உள்ளது. அதனால் வந்துள்ளார். வந்தபின் என்ன செய்ய போகிறார் என்பது தெரியாது. தமிழ்நாட்டில் விஜயால் ஜெயிக்க முடியாது. அது கஷ்டம் கூறினார். அதேநேரம், இன்னும் கொஞ்ச நாள் போகட்டும் அவரின் செயல்பாடுகளை பார்க்கலாம்” என்றும் சத்திய நாராயண ராவ் கூறினார்.
Read More : இளம் வயதில் முடி நரைப்பதற்கு உண்மையான காரணம் என்ன..? இதற்கு என்ன சிகிச்சை..? என்ன சாப்பிடலாம்..?