தமிழ் சினிமாவில் ஒளிபரப்பாகி வரும் தொலைக்காட்சிகளில் ஒன்று தான் விஜய் டிவி. இதில் ரசிகர்களை கவரும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன.
எந்த அளவிற்கு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பி டிஆர்பிஐ அதிகரித்திருக்கிறார்களோ அதே அளவிற்கு நெடுந்தொடர்கள் மூலமாகவும் அந்த டிஆர்பியை இந்த தொலைக்காட்சி பெற்றுள்ளது. பிற்பகல் வேளையில் தொடர்கள் ஒளிபரப்பாக தொடங்கி இடையில் இரவு வரையில் தொடர்கள் ஒளிபரப்பாகின்றன. அதேபோல பல தொடர்களை குடும்பங்கள் கொண்டாடி வருகின்றன.
இந்த நிலையில் தான் தற்சமயம் விஜய் டிவியில் தொடர்ந்து 4 தொடர்களை நிறுத்த திட்டமிட்டு இருப்பதாக ஒரு செய்தி கிடைத்திருக்கிறது.
எதிர்வரும் ஜூன் மாதத்திற்குள் பாண்டியன் ஸ்டோர்ஸ், காற்றுக்கென்ன வேலி, தமிழன் சரஸ்வதியும், ராஜா ராணி 2 என்று 4 நெடுந்தொடர்களை நிறுத்த உள்ளனர் என்று தகவல் கிடைத்திருக்கிறது. இதை கேட்டு ரசிகர்கள் சற்று அதிர்ச்சியில் உறைந்து இருக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும் ஆனால் தற்சமயம் இந்த தகவல் ரசிகர்களை ஏமாற்றுவதற்காக கூட இருக்கலாம் என்ற ஒரு தகவலும் இருக்கிறது.