fbpx

Vijayakanth | கேப்டன் மகன் விஜய பிரபாகரன் போட்டியிடும் தொகுதி இதுவா..? தீர்மானம் நிறைவேற்றம்..!!

மதுரை மாவட்டம் திருமங்கலம் – உசிலம்பட்டி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தேமுதிகவின் திருமங்கலம் தொகுதி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தின் தொடக்கமாக மறைந்த விஜயகாந்த் உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து தேமுதிக நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர். கூட்டத்தில் உரையாற்றிய நிர்வாகிகள், பாராளுமன்ற தேர்தலில் தேமுதிக போட்டியிடக் கூடிய பகுதியில் வெற்றி பெற கட்சி தொண்டர்கள் இப்போது முதல் பணியாற்ற வேண்டுமென ஆலோசனை வழங்கினார்.

Read More : ‘Lok Sabha தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டி’..!! ஓபிஎஸ் அறிவிப்பு..!! அதிர்ச்சியில் ஈபிஎஸ்..!!

தொடர்ந்து கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதில் குறிப்பாக விருதுநகர் பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் போட்டியிட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், திருமங்கலம் நகர் பகுதியில் பல்வேறு அரசு திட்டங்கள் செயல்படுத்தப்படாமல் உள்ளது எனவும் திட்டங்களை எல்லாம் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் உரையாற்றிய மாவட்ட செயலாளர் கணபதி, ”விருதுநகர் பாராளுமன்ற தேர்தலில் விஜய பிரபாகரன் போட்டியிட வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றினாலும், அவர் போட்டியிடும் பட்சத்தில் அவர் வெற்றிக்காக தொண்டர்கள் அனைவரும் முழு வீச்சில் தேர்தல் பணி ஆற்ற வேண்டும்“ என்று தெரிவித்தார்.

Chella

Next Post

Election 2024: ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 370 ஓட்டுகள்!… அமித்ஷாவின் திட்டம் என்ன?

Mon Feb 26 , 2024
Election 2024: மக்களவை தேர்தலில் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 370 கூடுதல் வாக்குகளைப் பெறுவதற்கு பாடுபட வேண்டும் என்று தொண்டர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வேண்டுகோள் விடுத்துள்ளார். மக்களவை தேர்தல் நெருங்குவதால், மத்தியப் பிரதேசத்தில் கள நிலவரத்தை தேர்தல் கள நிலவரங்களை அறிந்து, மக்களவைத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான உத்திகள் குறித்து அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகளுடன் அமித் ஷா ஆலோசனை நடத்தினார். அப்போது, லோக்சபா தேர்தலுக்கு இன்னும் 100 […]

You May Like