fbpx

விஜயகாந்தின் உடல் தீவுத்திடலில் வைக்கப்பட்டது…! இன்று காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை இருக்கும்…!

தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்தின் உடல் கோயம்பேடு அலுவலகத்தில் இருந்து அண்ணாசாலை தீவுத்திடலுக்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக கொண்டு செல்லப்பட்டது.

தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார். அவருக்கு வயது (71). அவரது மறைவால் தேமுதிக கட்சித் தொண்டர்கள், திரை ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். அவரது மறைவு தொடர்பாக மியாட் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், “நிமோனியா காரணமாக அனுமதிக்கப்பட்டு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்றுவந்த விஜயகாந்துக்கு மருத்துவப் பணியாளர்களின் கடின முயற்சி இருந்தபோதிலும் காலமானார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று அவரது உடலை பொதுமக்களின் பார்வைக்காக சென்னை கோயம்பேட்டில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டது. பொதுமக்கள் மற்றும் ரசிகர்களின் கூட்டம் அலைமோதுவதால் அவரது உடலை அண்ணாசாலை தீவுத்திடலில் வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்தின் உடல் கோயம்பேடு அலுவலகத்தில் இருந்து அண்ணாசாலை தீவுத்திடலுக்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக கொண்டு செல்லப்பட்டது. இன்று காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை இங்கு உடல் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்படும். பின்னர், இறுதிச் சடங்குகளுக்காக உடலை கோயம்பேடு அலுவலகத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.

Vignesh

Next Post

"ஆஹா... என்ன பழக்கம் இது."? புத்தாண்டை வினோதமாக கொண்டாடும் நாடுகள்.!

Fri Dec 29 , 2023
2024 ஆம் வருடத்திற்கு இன்னும் இரண்டு நாட்களே இருக்கிறது. உலகம் முழுவதும் புத்தாண்டை வரவேற்க கோலாகலத்துடன் தயாராகி வருகிறது. புத்தாண்டு கொண்டாட்டங்கள் உலகின் அனைத்து நாடுகளிலும் ஒரே நாளில் கொண்டாடப்பட்டாலும் கலாச்சாரத்தின் அடிப்படையில் புத்தாண்டை வரவேற்கும் நிகழ்வு நாடுகளுக்கு நாடு மாறுபடுகிறது. உலகின் பல்வேறு நாடுகள் தங்களது கலாச்சார மரபின்படி புத்தாண்டை எவ்வாறு வரவேற்கிறார்கள் என்பதை காணலாம். ஸ்பெயின் நாட்டில் புத்தாண்டு வரும் நள்ளிரவில் 12 திராட்சைகளை சாப்பிடுவதை வழக்கமாக […]

You May Like