fbpx

இன்று நீதிமன்றத்தில் ஆஜராகிறார் விஜயலட்சுமி..!! சிக்கலில் சீமான்..!! அதிர்ச்சியில் தம்பிகள்..!!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தாக்கல் செய்த வழக்கில், நடிகை விஜயலட்சுமி இதுவரை ஆஜராகாததால், இன்று ஏப்ரல் 2ஆம் தேதி இறுதி வாய்ப்பாக நடிகை விஜயலட்சுமிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கில் இறுதி வாய்ப்பு என்று நீதிமன்றம் எச்சரித்திருந்ததால், இன்று ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தன்னைத் திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாக, நடிகை விஜயலட்சுமி, சீமானுக்கு எதிராக கடந்த 2011ஆம் ஆண்டு வளசரவாக்கம் போலீசில் புகார் அளித்திருந்தார். புகாரின் அடிப்படையில், தனக்கு எதிராக பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி சீமான், சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில், கடந்த 2011ம் ஆண்டு அளித்த புகாரை 2012ஆம் ஆண்டிலேயே திரும்பப் பெற்றுக் கொள்வதாக நடிகை விஜயலட்சுமி கொடுத்த கடிதத்தின் அடிப்படையிலும், விசாரணையின் அடிப்படையிலும் போலீசார் வழக்கை முடித்து வைத்தனர். ஆனால், தற்போது இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளது’ என கூறியுள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்த போது காவல்துறை தரப்பில், ஏற்கனவே நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் பெங்களூருவில் வசித்து வரும் விஜயலட்சுமிக்கு நீதிமன்றத்தில் ஆஜராகும் படி நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதற்கு அவர் எந்த பதிலும் அளிக்கவில்லை, பின்னர் அவர் ஆஜராகவும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, நீதிமன்றத்தில் ஆஜராக விரும்பாவிட்டால் இந்த மனுவை ஏன் நிலுவையில் வைத்திருக்க வேண்டும்? என்று கேள்வி எழுப்பிய நீதிபதி, விஜயலட்சுமி ஆஜராக மேலும் ஒரு அவகாசம் வழங்குவதாகக் கூறி, விசாரணையை இன்று ஏப்ரல் 2ஆம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டிருந்தார்.

அதே போன்று நடிகை விஜயலட்சுமி இன்று நேரில் ஆஜராக முடியாவிட்டால், காணொலி காட்சி மூலமாகவும் ஆஜராகலாம் என்றும் நீதிபதி அனுமதியளித்து உத்தரவிட்டார். அதனால் இன்று நேரிலோ அல்லது காணொலி காட்சி வாயிலாகவோ நீதிபதி முன் நடிகை விஜயலட்சுமி ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read More : BREAKING | பாஜகவில் இணைகிறார் டி.ஆர். பாலுவின் மகள்..!! ஸ்கெட்ச் போட்டு தூக்கிய அண்ணாமலை..!!

Chella

Next Post

சிமெண்ட், நிலக்கரி, மின்சாரம், உள்ளிட்ட 8 தொழில் குறியீடு 12.1% அதிகரிப்பு...!

Tue Apr 2 , 2024
வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் வெளியிட்ட எட்டு முக்கிய தொழில்களின் குறியீட்டின்படி (அடிப்படை ஆண்டு 2011-12), 2024 பிப்ரவரி மாதத்தில் எட்டு முக்கிய தொழில்களில் நிலக்கரித் துறை மிக உயர்ந்த வளர்ச்சியை 11.6% எனக் கண்டுள்ளது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 190.1 புள்ளிகளுடன் ஒப்பிடும்போது பிப்ரவரி மாதத்தில் நிலக்கரி தொழில்துறையின் குறியீடு 212.1 புள்ளிகளை எட்டியுள்ளது. அதன் ஒட்டுமொத்த குறியீடு 2023 ஏப்ரல் முதல் 2024 பிப்ரவரி வரை […]

You May Like