தேமுதிக தலைவர் விஜயகாந்த் காலமானார்.
உடல் நலக்குறைவு காரணமாக தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் சிகிச்சை பலனின்றி காலமானார். சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு சிகிச்சை பெற்று வந்தார்.
தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சில நேரங்களில் சுயமாக சுவாசிப்பதில் சிரமம் இருந்ததால் அந்த நேரங்களில் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. நுரையீரல் நிபுணர்கள் அவரை கண்காணித்து சிகிச்சை அளித்தனர்.
இந்நிலையில், உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதால், மருத்துவமனையில் இருந்து கடந்த 12-ம் தேதி தான் விஜயகாந்த் வீடு திரும்பினார். விஜயகாந்த் சிகிச்சை பெற்று வரும் மியாட் மருத்துவமனை வளாகம் முன்பு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அவரது மறைவிற்கு அரசியல் தலைவர்களும் ரசிகர்களும் தங்களது இரங்கல் செய்தியை பதிவு செய்து வருகின்றனர்.