fbpx

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்..!! பரபரப்பு அறிக்கையை வெளியிட்ட தமிழக வெற்றிக் கழகம்..!!

ஜூலை 10ஆம் தேதி நடைபெறவுள்ள விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில், தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடாது என புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ”தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அவர்கள், கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி வெளியிட்ட கட்சித் தொடக்க அறிவிப்பிற்கான முதல் அறிக்கையிலேயே, எங்கள் கழகத்தின் அரசியல் நிலைப்பாடு குறித்துத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். விரைவில் கழகத்தின் கொள்கைகள், கோட்பாடுகள் மற்றும் செயல்திட்டங்களை மாநில மாநாட்டில் வெளியிடுவோம்.

அதன் தொடர்ச்சியாகக் கழக உள்கட்டமைப்பு சார்ந்த பணிகள், தமிழகம் முழுவதும் மக்கள் சந்திப்புப் பயணங்கள் என்று வரும் 2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றப் பொதுத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை மேற்கொள்வோம். அதன்பிறகு தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று, மக்கள் பணியாற்றுவதுதான் நமது பிரதான இலக்கு என்று ஏற்கெனவே தெரிவித்துள்ளார்.

எனவே, அதுவரை இடைப்பட்ட காலத்தில் நடத்தப்படும் எந்தத் தேர்தலிலும் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடாது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக, ஜூலை 10ஆம் தேதி நடைபெறவுள்ள விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில், தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடாது என்றும், எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை என்றும் தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

Read More : அசத்தல் திட்டம்..!! அச்சமின்றி முதலீடு செய்யலாம்..!! மாதம் எவ்வளவு கிடைக்கும் தெரியுமா..?

English Summary

Bussy Anand has said that the Tamil Nadu Vetri Kazhagam will not contest in the Vikravandi Legislative Assembly by-election to be held on July 10.

Chella

Next Post

தமிழக ரேஷன் கடைகளில் பொருட்கள் தட்டுப்பாடு..!! விடியா திமுக அரசுக்கு கண்டனம்..!! சீறிய எடப்பாடி..!!

Tue Jun 18 , 2024
Edappadi Palaniswami has insisted that all the products should be distributed smoothly without any shortage in the ration shops of Tamil Nadu.

You May Like