fbpx

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல்..!! நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அறிவிப்பு..!!

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தல் முடிந்து இருக்கும் நிலையில், ஜூலை 10ஆம் தேதி விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் யார் போட்டியிட போகிறார் என்பதனை கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை ஒன்றை வெளியீட்டு அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”ஜூலை 10 அன்று, தமிழ்நாட்டில் நடைபெறவிருக்கும் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக என் அன்புத்தங்கை மருத்துவர் அபிநயா (இளங்கலை சித்த மருத்துவம் B.H.M.S., MD) அவர்கள் போட்டியிடவிருக்கிறார் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். கட்சியின் அனைத்து பொறுப்பாளர்களும் நாம் தமிழர் கட்சியின் வெற்றிக்கு முழு ஒத்துழைப்பை நல்குமாறு அன்போடு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” என சீமான் தெரிவித்துள்ளார்.

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட இருக்கும் மருத்துவர் அபிநயா, நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தருமபுரி தொகுதியில் போட்டியிட்டு 65,000 வாக்குகள் பெற்று 4-வது இடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More : விவசாயிகளுக்கு செம குட் நியூஸ்..!! ரூ.78.67 கோடி ஒதுக்கீடு..!! தமிழக வேளாண்துறை அறிவிப்பு..!!

English Summary

It has been announced that Abhinaya will contest on behalf of Nam Tamilar Party in Vikravandi constituency by-election.

Chella

Next Post

டார்கெட் முடிக்கும் வரை 'No Break' தண்ணீர் கூட கிடையாதாம்!! Amazon-ல என்ன தான் நடக்கிறது?

Fri Jun 14 , 2024
Workers in Amazon warehouse get no toilet, water breaks till targets met: 'Women worst affected

You May Like