கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே சோமகோட்டை ஊராட்சி ஒன்றிய தலைவராக பொறுப்பு வகித்து வருபவர் மணிவண்ணன். சென்ற சில தினங்களாக இவர் சில பெண்களுடன் தனிமையில் இருப்பது உள்ளிட்ட ஆபாச புகைப்படங்கள் தொடர்ச்சியாக சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த புகைப்படங்களில் அதே கிராமத்தைச் சேர்ந்த சில பெண்கள் இடம்பெற்று இருந்ததால் கிராம மக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
இதுகுறித்து அந்த கிராம மக்கள் சார்பாக கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் வழங்கப்பட்டது. அந்தப் புகாரில் ஊராட்சி ஒன்றிய தலைவராக பொறுப்பு வகித்து வரும் மணிவண்ணன் எங்களுடைய கிராமத்தில் இருக்கின்ற குடும்பப் பெண்களை குறி வைக்கும் விதமாக அவர்களிடம் அரசு வேலை வாங்கி கொடுப்பதாகவும், அரசிடம் இருந்து பல்வேறு சலுகைகளை பெற்றுக் கொடுப்பதாகவும் தெரிவித்து அந்த பெண்களை ஏமாற்றி இருக்கிறார் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்.
அத்துடன் அந்த பெண்களிடம் தனிமையில் இருந்து உல்லாசம் அனுபவித்ததுடன், அவர்களோடு தனிமையில் இருப்பதை தன்னுடைய கைபேசி கேமராவில் பதிவு செய்து அதை தற்போது இணையதளத்தில் பரப்பி வருகிறார். இதன் காரணமாக, எங்களுடைய கிராம பெண்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு சென்றிருக்கிறார்கள். ஆகவே இந்த விவகாரம் தொடர்பாக சரியான விசாரணை நடத்தி ஊராட்சி ஒன்றிய தலைவர் மணிவண்ணனுக்கு சரியான தண்டனை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.
இந்த மனுவை பெற்றுக் கொண்ட காவல்துறை கண்காணிப்பாளர் இனி மணிவண்ணன் பாதிக்கப்பட்ட பெண்கள் தைரியமாக வந்து புகார் வழங்கலாம். அப்படி புகார் வழங்கும் பெண்களின் ரகசியம் காக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் அவர் மீது சரியான விசாரணை நடத்தி நிச்சயமாக தண்டனை பெற்றுக் கொடுக்கப்படும் என்று உறுதி அளித்திருக்கிறார்.