fbpx

கிராமங்கள் வாரியான வரைவு வழிகாட்டி பதிவேடு… 15 நாட்களுக்குள் இதை செய்ய வேண்டும்…!

பொதுமக்கள் பார்வையிடும் வகையில் அரசு அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ள வருவாய் கிராமங்கள் வாரியான வரைவு வழிகாட்டி பதிவேடு மீது ஆட்சேபனைகள் மற்றும் கருத்துரைகள் இருப்பின் 15 நாட்களுக்குள் வழங்கலாம்.

இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் தனது செய்தி குறிப்பில்; சந்தை மதிப்பு வழிகாட்டி மதிப்பினை சீரமைத்தல் தொடர்பாக இந்திய முத்திரைச் சட்டம் பிரிவு 47AA-601 கீழான தமிழ்நாடு முத்திரை (சொத்துகளுக்கான சந்தை மதிப்பு வழிகாட்டி தயாரிக்க மதிப்பீடு செய்தல், வெளியிடுதல் மற்றும் திருத்தியமைத்தலுக்காக மதிப்பீட்டு குழு ஏற்படுத்துதல்) விதிகள் 2010, விதிகளில் விதி 4(2)-ன் படி மைய மதிப்பீட்டு குழு 26.04.2024ல் நிர்ணயம் செய்த நெறிமுறை கோட்டுபாட்டிற்கு இணங்க சேலம் மாவட்டத்தில் உள்ள வருவாய் கிராமங்கள் வாரியாக வரைவு வழிகாட்டி பதிவேடு தயாரிக்கப்பட்டு, பொதுமக்கள் பார்வையிடும் வகையில் வட்டாட்சியர், சார்பதிவாளர் அலுவலகங்கள் உட்பட முக்கிய அரசு அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும், இதன் விவரங்கள் www.tnreginet.gov.in என்ற இணையதள முகவரியில் அனைவரும் தெரிந்துகொள்ளும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் மீது ஏதேனும் ஆட்சேபனைகள் மற்றும் கருத்துரைகள் இருப்பின், அதனை 15 நாட்களுக்குள் மாவட்ட ஆட்சியர் தலைமையிலான மதிப்பீட்டு துணைக் குழுவிடம் மதிப்பீட்டு துணைக்குழு, அறை எண்: 313, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், சேலம் 636 001 என்ற முகவரியில் பொதுமக்கள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அளித்திட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

English Summary

Objections and comments on the draft guidelines can be filed within 15 days of availability.

Vignesh

Next Post

பட்ஜெட் 2024!. இவர்களுக்கு வரி குறைப்பு!. எந்தெந்த வருமானப் பிரிவுகள் வரிச் சலுகையை எதிர்பார்க்கலாம்?

Tue Jun 18 , 2024
Tax reduction for them! Which income categories can expect tax relief?

You May Like