fbpx

நெல்லை மாவட்டத்தில் 55 கல்குவாரிகளில் 54இல் விதிமீறல்..! குவாரிகளை மூட உரிமையாளர்களுக்கு நோட்டீஸ்..!

நெல்லை மாவட்டத்தில் மொத்தம் 54 கல்குவாரிகளில் விதிமீறல்கள் நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே உள்ள அடைமிதிப்பான்குளம் கல்குவாரியில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி 4 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இதையடுத்து, மாவட்டம் முழுவதும் உள்ள 55 குவாரிகளையும் முழுமையாக ஆய்வு செய்து விதிமீறல்களை கண்டறியுமாறு ஆட்சியர் விஷ்ணு உத்தரவிட்டிருந்தார். அதன்படி, சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு, குவாரிகளை ஆய்வு செய்து அதன் அறிக்கையை ஆட்சியரிடம் சமர்பித்தது. அதில், மாவட்டத்தில் மொத்தம் உள்ள 55 கல்குவாரிகளில் 54 கல்குவாரிகளில் விதிமீறல்கள் நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒரு குவாரி மட்டும் உரிமம் பெற்று இன்னும் தொடங்கப்படாததால், அதில் எந்தவிதமான விதிமீறல்களும் இல்லை.

Take action on the quarries CPIM Urges Tamilnadu Government | கல்குவாரிகள்  மீது நடவடிக்கை எடுங்கள் அரசிடம் வாள் சுழற்றும் கூட்டணி கட்சி | News in Tamil

இந்நிலையில், இதில் 13 கல்குவாரிகளுக்கு ஏன் கல்குவாரிகளை மூடக்கூடாது என விளக்கம் கேட்டு ஆட்சியர் விஷ்ணு தரப்பில் இருந்து குவாரி உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் விதிகளை மீறி அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமான கனிம வளங்களை வெட்டி எடுத்ததாக 41 கல்குவாரிகளுக்கு சுமார் ரூ.300 கோடி வரை அபராதம் விதித்து கனிமவள துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். அந்த அபராத தொகையை வசூலிக்க அந்தந்த சரக சப்-கலெக்டர்களுக்கு கனிமவளத்துறை பரிந்துரை செய்துள்ளது.

திருப்பூரில் முறைகேடாக இயங்கிய 40 கல்குவாரிகள் மீது வழக்கு-அதிகாரிகள்  அதிரடி நடவடிக்கை | Prosecution-authorities take action against 40 quarries  operating illegally in Tirupur

நெல்லை மாவட்டத்தில் கடந்த 2017ஆம் ஆண்டு முதல் அனுமதி அளிக்கப்பட்டு செயல்பட்டு வந்த அனைத்து குவாரிகளிலும் விதிமீறல்கள் நடந்ததுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் அபராதம் விதிக்கப்பட்ட குவாரிகள் அபராத தொகையை கனிம வளத்துறையில் செலுத்தினால் மீண்டும் குவாரிகள் நடத்த அனுமதிக்கப்படும் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போது விதிமுறைகள் மீறப்பட்ட குவாரிகளில் பெரும்பாலானவை அரசியல் கட்சி பிரமுகர்களுக்கு சொந்தமானவை என்பது குறிப்பிடத்தக்கது.

Chella

Next Post

அதிமுக பொதுக்குழு நாளான்று எடப்பாடிக்கு இவ்வளவு பிரச்சனையா? டெண்டர் வழக்கும் அன்றே விசாரணை..!

Sat Jul 9 , 2022
அதிமுக பொதுக்குழு நாளான்றே எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணை வர இருப்பதால், அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பு நிலவுகிறது. அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோது, தாம் பொறுப்பு வகித்து வந்த நெடுஞ்சாலைத்துறையில் பல்லாயிரக்கணக்கான ரூபாய் டெண்டர்களை முறைகேடாக தமது சம்பந்தி மற்றும் அவர் பங்குதாரராக உள்ள நிறுவனங்களுக்கு வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதிமுக ஆட்சியில் ரூ.3,120 கோடி மதிப்பிலான நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தங்களை […]

You May Like