பொதுவாக ஜாதி கலவரம், மத கலவரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் நாட்டில் எழுவது சகஜமான ஒன்றுதான். ஆனாலும் அதனை ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும். அப்படி ஜாதி, மத ரீதியாக பிரச்சனைகள் ஏற்பட்டால் அதனை உடனடியாக முடிவுக்கு கொண்டு வருவதும் அரசாங்கத்தின் கடமை தான் என்று எல்லோருக்கும் தெரியும்.
ஹரியானா மாநிலம் குருகிராமுக்கு அருகே இருக்கின்ற நூக என்ற பகுதியில் ஒரு மிகப்பெரிய மத ஊர்வலம் நடைபெற்றது. அப்போதுதான் அந்த மத ஊர்வலத்தில் வன்முறை வெடித்தது. விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்தவர்கள் நடத்திய பிரிட்ஜ் மண்டல் ஜலபிஷேக் யாத்திரையை குருகிராம் ஆல்வார் தேசிய நெடுஞ்சாலையில் இளைஞர்கள் சிலர் தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது. மேலும் அந்த ஊர்வலத்தில் கற்கள் வீசி இருக்கிறார்கள் அந்த இளைஞர்கள்.
இதன் காரணமாக, கலவரம் மூண்டது. அதனால் அந்த பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள், இருசக்கர வாகனங்கள் உள்ளிட்டவை தீக்கிரையாக்கப்பட்டனர். இதன் காரணமாக, அச்சமடைந்த ஊர்வலத்திற்கு வந்த சுமார் 2500 பேர் நுல்ஹர் மகாதேவ் ஆலயத்தில் தஞ்சம் அடைந்திருக்கிறார்கள்.
அவர்களின் வாகனங்கள் வெளியே நிறுத்தப்பட்டிருக்கிறது. ஆனாலும் அவர்களை இதுவரையில் காவல்துறையினரால் வெளியேற்ற இயலவில்லை என்று சொல்லப்படுகிறது. வெளியிட்ட வீடியோ காரணமாக தான் இந்த மோதல் உண்டானதாக தகவல் கிடைத்திருக்கின்றன.