1992-ல் வெளியான ஓடிய நாட்டுப்புற பாடல் தொகுப்பு `பலிபுல்’ (Baliphul). இந்த தொகுப்பில் இடம்பெற்ற 8 பாடல்களில் ஒரு பாடல் தான் இந்த சீ சீ சீ ரே நானி. பிரபல ஓடியா இசைக் கலைஞரான சத்ய நாராயணன் அதிகாரி இந்த பாடலுக்கு இசையமைத்து, பாடல் எழுதி, பாடியும் இருக்கிறார்.
காதல் தோல்வி பாடலாக இது உருவாக்கப்பட்டாலும், இதற்கான வீடியோ பாடலை பார்த்த பலரும் அதை ஒரு ட்ரோல் மெட்டீரியலாக்கி சமூக வலைதளங்களில் பரவவிட்டனர். அதைத் தொடர்ந்து பலரும் இந்தப் பாடலுக்கான ரீல்ஸை பகிர்ந்தனர். இன்னும் உச்சக்கட்டமாக பாடலுக்கான தமிழ் வெர்ஷனைக் கூட உருவாக்கி அதையும் ட்ரெண்ட் செய்தனர். இப்படித்தான் சமீப நாட்களாக ட்ரென்டிங்கில் இருக்கிறது சீ சீ சீ ரே நானி.
அர்த்தம் தெரியாவிட்டாலும், பாடலை வைத்து ‘வைப்’ செய்து பலரும் ட்ரெண்டிங்கில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டனர். இந்தப் பாடலின் அர்த்தம் என்னவென்றால், “நீ வசதியை பார்த்து விட்டாய் ஆனால் என்னுடைய உண்மையான மதிப்பை உணரவில்லை. Sunake Chinlu Banaake Chinlu Manush Chinlu Naai என்றால் நீ தங்கத்தையும் நகைகளையும் உணர்ந்து விட்டாய் ஆனால் ஒரு உண்மையான மனிதனை அடையாளம் காணவில்லை. Dhan Naai Boli Mora Paakhe Nani Taar Kaachhe Uthigalu என்றால் உன்னிடம் வசதி இல்லை என்பதால் என்னை இன்னொருத்திக்காக விட்டு விட்டாய்.
Dhan Achhe Sina Man Naai Taakhe Tui Jaani Na Paaralu என்றால், நீ அடையாளம் கண்ட அந்த வசதியானவன் ஒருவேளை இதயமற்றவனாக இருக்கலாம். Gote Din Mishaa Jagidelu Naai Kede Katha Karidelu என்றால், நாம் சேர்ந்து இருந்த நாட்களை நீ பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை. Muu Gaa’n Jaaikiri Aasalaa Bele Kenta Paasari Delure Nani Chhi Chhi Chhi என்றால், நீ என்னிடம் மோசமான வார்த்தைகளை பேசி இருக்கிறாய் நான் திரும்பி வருவதற்குள் எப்படி இதையெல்லாம் நீ மறந்தாய்.. Chhi Chhi Chhi Re Nani Chhi என்றால் உன்னை நினைத்து வெட்கப்படுகிறேன் நானி…Chhi Chhi Chhi Re Nani Chhi – உன்னை நினைத்து வெட்கப்படுகிறேன் என்பதே இதன் தமிழ் அர்த்தம்..
Read more : இந்த உணவுகளை சாப்பிட்டாலே போதும்.. உடலில் தேங்கியிருக்கும் கெட்ட கொழுப்புகள் சீக்கிரமே கரையும்..!!