சில இளைஞர்கள் தகராறில் ஈடுபட்ட சம்பவம் விருத்தாச்சலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் ஆலடி சாலையில் இருக்கும் மது அருந்திய படி சில இளைஞர்கள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்துள்ளனர். பின்னர், அங்கே கூச்சலிட்டு கத்தி ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர். இளைஞர்களின் இந்த மோசமான நடவடிக்கையை அப்பகுதியை சேர்ந்த சிவராமகிருஷ்ணன் என்பவர் தட்டி கேட்டுள்ளார்.
இதனால், ஆத்திரமடைந்த இளைஞர்கள் அவருடன் தகராறு செய்தனர். தொடர்ந்து குடியிருப்பு பகுதியில் மெயின் கேட்டை உடைக்க முயற்சித்துள்ளனர்.
உடனடியாக இது குறித்து போலீசில் தகவல் தெரிவிக்கப்பட அவர்கள் விரைந்து வந்தனர்.
போலிஸ் வருவதை கண்ட இளைஞர்கள் அங்கிருந்து உடனடியாக தப்பிச் சென்றுள்ளனர். அவர்கள் தகராறு செய்ததும், போலீஸ் வந்ததும் அங்கிருந்து பரபரப்பாக வெளியேறியதும் தற்போது வீடியோவாக சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.