fbpx

சற்று முன்…! தெலங்கானா சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது…!

தெலங்கானா சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.

தெலுங்கானா மாநிலத்தில் 119 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மாநிலத்தில் உள்ள 119 தொகுதிகளில் 2,290 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 13 தொகுதிகளில் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது, மற்ற பகுதிகளில் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். பாரதிய ராஷ்ட்ரீய சமிதி, பாஜக, காங்கிரஸ் வீட்டின் முக்கிய கட்சிகள் மாநிலத்தில் போட்டியிடுகின்றன.

அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதற்கு முன்பாக இந்த ஆண்டுடன் ஆட்சிகாலம் நிறைவடையும் 5 மாநில சட்டப்பேரவைக்கான தேர்தல் தேதிகளை தலைமை தேர்தல் ஆணையர் கடந்த மாதம் 9-ம் தேதி அறிவித்தார். அதன்படி, மிசோரம், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய நான்கு மாநிலங்களுக்கும் தேர்தல் முடிந்து விட்டது. மீதம் உள்ள தெலங்கானா மாநிலத்துக்கு இன்று தேர்தல் நடைபெற உள்ளது. 5 மாநிலங்களில் பதிவான வாக்குகள் டிசம்பர் 3-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

ஐந்து மாநிலங்களில் தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து ரூ.1760 கோடிக்கு மேல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது 2018-ம் ஆண்டில் இந்த மாநிலங்களில் நடைபெற்ற முந்தைய சட்டமன்றத் தேர்தல்களில் கைப்பற்றப்பட்டதை விட 7 மடங்கு (ரூ.239.15 கோடி) அதிகமாகும். தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் இருந்து பெறப்பட்ட அறிக்கைகளின்படி, தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் அதிகபட்சமாக தெலங்கானாவில் ரூ.700 கோடி மதிப்பிலான ரொக்கம், மதுபானம், ஆபரணங்கள், இலவச பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Vignesh

Next Post

சிலிண்டர் விலையில் மாற்றமா..? எதிர்பார்ப்பில் இல்லத்தரசிகள்..!! நாளை வெளியாகும் அறிவிப்பு..!!

Thu Nov 30 , 2023
நவம்பர் மாதத்தில், சமையல் சிலிண்டரின் விலை பொதுமக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிலையில், நாளைய தினம் கேஸ் சிலிண்டர்களின் விலையில் மாற்றம் இருக்குமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன. இதில், பெட்ரோல், டீசல் விலைமட்டும் தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. கேஸ் விலையோ, […]

You May Like