fbpx

தமிழ்நாட்டில் நாளை வாக்குப் பதிவு; களத்தில் 950 வேட்பாளர்கள்

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கடந்த ஒருவாரமாக அனல் பறந்த தேர்தல் பிரசாரம் நேற்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது.

மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் 39 தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் 1 தொகுதிக்கும் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்படுகிறது.

இந்த மக்களவைத் தேர்தலில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி என 4 முனை போட்டி நிலவுகிறது. ஒவ்வொரு அரசியல் கட்சியினரும் பம்பரமாக சுற்றி பிரசாரத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக தேசியத் தலைவர்கள் பிரதமர் மோடி, பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ஆகியோரின் வருகையால் தேர்தல் இன்னும் சூடுபிடித்தது. மேலும் பிரதமர் மோடி நடத்திய ரோடு ஷோவும் கவனத்தை ஈர்த்தது.

கடந்த ஒருவாரமாக பரபரப்பாக நடைபெற்ற தேர்தல் பிரசாரம் நேற்று மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. இதற்கான வாக்குப் பதிவு நாளை தொடங்குகிறது. தமிழ்நாட்டில் மொத்தம் 76 பெண் வேட்பாளர்கள் உட்பட மொத்தம் 950 பேர் களத்தில் உள்ளனர்.

Read More: BH3 | சூரியனை விட 33 மடங்கு பெரிய கருந்துளை கண்டுபிடிப்பு.!! அதிர்ச்சியில் ஆராய்ச்சியாளர்கள்.!!

Baskar

Next Post

ரூ.1,25,000 சம்பளத்தில் சூப்பர் வேலை.!! மிஸ் பண்ணிடாதீங்க..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

Thu Apr 18 , 2024
இந்திய விளையாட்டு ஆணையமானது Medical Officer பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பை ஒன்றை வெளியிட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். பணியிட விவரங்கள் : நிறுவனம் – Sports Authority of India பணியின் பெயர் – Medical Officer விண்ணப்பிக்க கடைசி தேதி – 02.05.2024 விண்ணப்பிக்கும் முறை – Online காலிப்பணியிடங்கள்: Medical Officer பணிக்கென […]

You May Like