fbpx

தமிழகத்தில் தொடங்கியது வாக்குப்பதிவு!… முதல் ஆளாக சென்ற நடிகர் அஜித்!… ரசிகர்கள் செல்ஃபி எடுத்து மகிழ்ச்சி!

Ajith: மக்களவை தேர்தலையொட்டி, தமிழகம், புதுச்சேரியில் இன்றுகாலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இதையொட்டி மாநிலம் முழுவதும் பாதுகாப்புப் பணியில் 1.90 லட்சம் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 102 மக்களவைத் தொகுதிகளை உள்ளடக்கிய பகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறும். மாலை 6 மணி வரை வரிசையில் நிற்கும் அனைவரும் வாக்களிக்கலாம். மாலை 6 மணி வரை வரும் அனைவருக்கும் டோக்கன் வழங்கப்படும் , டோக்கன் பெற்ற கடைசி வாக்காளர் வரை வாக்களிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 68, 321 வாக்குச் சாவடிகள் உள்ளன. 39 வாக்கு எண்ணும் மையம். மொத்த வாக்காளர்கள் 6.23 கோடி . 18 முதல் 19 வயதிலான முதல் முறை வாக்களிப்போர் 10.92 லட்சம். 3.32 லட்சம் பணியாளர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர். தமிழகத்தில் 950 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 874 ஆண் வேட்பாளர் , 76 பெண் வேட்பாளர்கள். 190 கம்பெனி துணை ராணுவப் படையினர் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். 15 கம்பெனிகளைச் சேர்ந்த துணை ராணுவ படையினர் தேர்தலுக்கு பின் வாக்கு எண்ணிக்கை மையங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். தமிழகத்தில் 8050 பதற்றமான வாக்குச்சாவடிகள் , 181 வாக்குச் சாவடிகள் மிகவும் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது.

இந்தநிலையில், தமிழகத்தில் இன்றுகாலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. நடிகர் அஜித்குமார் தனது ஜனநாயக கடமையை ஆற்றுவதற்காக முதல் ஆளாக திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடிக்கு சென்றுள்ளார். அங்கு மக்களுடன் மக்களாக வரிசையில் நின்று வாக்களித்துள்ளார். வெள்ளைச்சட்டை கருப்புக்கண்ணாடி உடன் 6.40 மணிக்கே வாக்குச்சாவடிக்கு சென்ற அவர், 20 நிமிடங்களுக்கு மேல் காத்திருந்து வாக்களித்தார். அப்போது ரசிகர்கள் அஜித்துடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

Readmore: பிரபல Everest நிறுவனத்தின் மீன் குழம்பு மசாலாவில் பூச்சிக்கொல்லி..!! அதிரடியாக தடை விதிக்க அரசு..!!

Kokila

Next Post

வாக்காளர்களே செம குட் நியூஸ்..!! இன்று அரசுப் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம்..!!

Fri Apr 19 , 2024
நாடு முழுவதும் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. முதற்கட்டமாக இன்று தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு தொடங்கியது. இந்நிலையில், இதில் வாக்களிக்க 6 கோடியே 21 லட்சம் பேர் தகுதி பெற்றுள்ளனர். இவர்களுக்காக 60,000-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஜனநாயக கடமையாற்ற வெளியூரில் பயணம் செய்யும் நபர்கள் தங்களது சொந்த ஊருக்கு படையெடுத்துள்ளனர். இந்நிலையில், வாக்களிப்பதை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் முக்கிய அறிவிப்பு […]

You May Like