பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரூ.1,000 பெறுவதற்கு தமிழகம் முழுவதும் வீடு, வீடாக டோக்கன் விநியோகம் தொடங்கியது.
2024 ஆம் ஆண்டு தமிழர் திருநாளாம் தைப்பொங்கலை சிறப்பாக கொண்டாட தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக்கரும்பு மற்றும் ரூ.1000 ரொக்கப்பணம் பொங்கல் பரிசாக வழங்க தமிழ்நாடு அரசால் ஆணைப் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இப்பரிசு தொகுப்பு ஒன்றிய, மாநில அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிவோர், சர்க்கரை அட்டைதாரர்கள், பொருளில்லா அட்டைதாரர்கள் தவிர்த்து ஏனைய குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
ஒன்றிய, மாநில அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிவோர், சர்க்கரை அட்டைதாரர்கள், பொருளில்லா அட்டைதாரர்கள் தவிர்த்து ஏனைய குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் 09.01.2024 வரை பரிசுத்தொகுப்பு வழங்கப்படும்.
நாள், நேரம் போன்ற விவரங்கள் குறிப்பிட்டு முன்கூட்டியே டோக்கன் வழங்கப்படும். பொங்கல் பரிசு தொகுப்பு 10.01.2024 முதல் 14.012024 வரை தொடர்ச்சியாக விநியோகம் செய்யப்படும். பொங்கல் பரிசு தொகுப்பு நியாயவிலைக் கடை விற்பனை முனைய இயந்திரத்தில் (POS) பயோமெட்ரிக் முறை மூலம் வழங்கப்படும்.