fbpx

டோக்கியோ – சென்னை இடையே நேரடி விமான சேவை வேண்டும் – மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்

டோக்கியோ மற்றும் சென்னை இடையே மீண்டும் நேரடி விமான சேவையை அறிமுகப்படுத்த வேண்டும் என மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதி ராதித்ய சிந்தியாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாட்டில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். 

இந்நிலையில் முதலமைச்சர் எழுதியுள்ள அந்த கடிதத்தில் தமிழ்நாட்டில், நிசான், தோஷிபா, யமஹா, கோமேட்ஸு, மிட்சுபிஷி, ஹிட்டாச்சி போன்ற பல ஜப்பானிய பெருநிறுவனங்கள் தங்களது உற்பத்தி ஆலைகளை அமைத்துள்ளதையும், ஜப்பான்-இந்தியா முதலீட்டு ஊக்குவிப்பு கூட்டாண்மைத் திட்டத்தின்கீழ் இந்தியாவில் நிறுவப்பட்டுள்ள 12 தொழில் நகரங்களில், 3 தமிழ்நாட்டில் உள்ளதையும் குறிப்பிட்டுள்ள அவர், தமிழ்நாட்டில் 600க்கும் மேற்பட்ட ஜப்பானிய நிறுவனங்கள் செயல்பட்டு வருவதால், கடந்த இருபதாண்டுகளில் ஜப்பான் நாட்டினரின் வருகை கணிசமாக உயர்ந்துள்ளது என தெரிவித்துள்ளார். 

மேலும் இந்தியாவில், ஜப்பானிய சமூகத்தின் மிகப்பெரிய தாயகமாக சென்னை திகழ்வதாகவும்  தமிழகத்திற்கும் ஜப்பானுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் கலாச்சார உறவுகள் தொடர்ந்து வலுவடைந்து வருவதுடன், சுற்றுலா வடிவிலும் இருநாட்டு மக்களுக்கு இடையிலான உறவுகள் வளர்ந்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது சென்னைக்கும் டோக்கியோவுக்கும் இடையே நேரடி விமான சேவை இல்லை என்றும் நேரடி விமான இணைப்பு இல்லாததால், சென்னைக்கும் டோக்கியோவுக்கும் இடையிலான பயண நேரம் சுமார் 7 மணி நேரம் இரட்டிப்பாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். எனவே சென்னை-டோக்கியோ இடையே நேரடி விமான சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் என்று முதலமைச்சர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Baskar

Next Post

திருட பொருட்கள் இல்லாததால் சமைத்து வைத்திருந்த உணவை சாப்பிட்டு சென்ற கொள்ளையர்கள்..!! நாமக்கல்லில் சுவாரஸ்யம்..!!

Wed May 31 , 2023
பள்ளிபாளையம் அருகே அடுத்தடுத்து 5 வீடுகளில் கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர்கள், வீட்டில் பொருட்கள் இல்லாததால் சமைத்து வைத்திருந்த உணவை சாப்பிட்டு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்த கணபதிபாளையம் பேருந்து நிறுத்தம் அருகேயுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நள்ளிரவில் நுழைந்த மர்மநபர்கள் 10 வீடுகளின் வெளிப்புற கதவுகளை பூட்டிவிட்டு, 5 வீடுகளில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஜான்சா என்பவர் வீட்டில் மட்டும் பொருட்களை எடுத்துச் சென்ற மர்மநபர்கள், […]

You May Like